துருக்கி, இத்தாலி மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது காட்டுத்தீ விபத்து. தற்போது இந்த சேதம் பிரான்சுக்கு நிகழ வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென் பிரான்சு பகுதி அதிகாரிகள் அறிவித்திருக்கும் பதிவில் பிரான்சை பெரிய ஆபத்து ஒன்று நெருங்கி வருவதாக இந்த காட்டுத்தீ பரவி நெருங்கி வருவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் தென் பகுதியில் உள்ள Var, Alpes-Maritimes, Bouches-du-Rhone போன்ற பகுதிகள் இந்த நெருங்கும் காட்டுத்தீயினால் பாதிக்கப்படலாம் எனவே மக்கள் இந்த பகுதியில் உள்ள காடுகள் சார்ந்த பகுதியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் வறண்ட நிலை மற்றும் அதிவேகமாக வீசும் காற்றின் காரணமாக தீ பரவக்கூடும் என்பதால் அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.