TamilSaaga

“சட்டென்று பிரேக் போட்ட ஓட்டுநர்” : நிலைகுலைந்த பயணி, சிங்கப்பூரில் SBS ஓட்டுநருக்கு அபராதம் – ஆமாம் ஏன் பிரேக் போட்டாரு?

சிங்கப்பூரில் SBS பஸ் டிரைவர் தனது வாகனத்துக்கும் முன் சென்ற காருக்கும் இடையில் பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்க தவறிய நிலையில், அந்த காருடனான மோதலை தவிர்க்க பிரேக்குகளை பலமாக அலுத்தியுள்ளார். டிரைவரின் இந்த திடீர் செயலால் 60 வயது பயணி கீழே விழுந்து பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்மணிக்கு முதுகெலும்பில் காயங்கள் மற்றும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

64 வயதான ஓங் சுவான் ஹாய் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 7) தனது அலட்சியமான செயலால் இன்னொருவர் காயமடைந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த சிங்கப்பூரர் இரண்டு மாதங்களுக்கு அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 65 வயதான முன்னே சென்ற அந்த காரின் டிரைவர், டாங் டோ பியோவ் இந்திராணி கோவிந்தசாமிக்கு காயம் ஏற்படும் அளவிற்கு கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு அவர் மீது இன்னும் நிலுவையில் உள்ளது.

கடந்த மே 30, 2019 அன்று மாலை 5.30 மணியளவில் பிளாக் 370 க்கு அருகில் உள்ள டம்பைன்ஸ் அவென்யூ 7 வழியாக அந்த பேருந்து பயணித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பேருந்தின் முன்னால் நேரடியாகச் சென்று சட்ரென்று காரை நிறுத்தியுள்ளார். தனது தோழர் ஒருவரை அங்குள்ள பேருந்து நிலையத்தில் இறக்கிவிட அவர் அவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது. சமிக்ஞை செய்த ஏழு வினாடிகளில், அவரது கார் பேருந்து முனையத்தின் நுழைவாயில் அருகே நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடியாக மோதலைத் தவிர்க்க ஓட்டுநர் ஓங் பிரேக் போட்டுள்ளார். இதனால் பேருந்தின் சக்கர நாற்காலி மண்டலத்திற்கு அருகில் நின்றிருந்த திருமதி இந்திராணி சமநிலையை இழந்து தரையில் விழுந்தார்.

Related posts