தென்ஆப்பிரிக்க நாட்டில் இருந்து பரவியதாகக் கருதப்படும் பீட்டா வகை வைரஸ் கிருமி தற்போது பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனால் “சுகாதார பாஸ்” என்கின்ற ஒன்றை அறிமுகம் செய்து மக்கள் பொதுவெளியில் நடமாடுவதற்கு ஆவணம் செய்து வருகிறது பிரான்ஸ் நாட்டு அரசு. இந்நிலையில் இந்த சுகாதார பாஸினை போலியாக வழங்கிய பெண்ணுக்கு தற்போது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரையிலும் ரயில் நிலையங்கள், நீண்ட தூர பயணங்கள் மற்றும் உணவகங்களில் உணவு உண்ண “சுகாதார பாஸ்: என்பது முக்கியமானதாகும். இந்நிலையில் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலியாக இந்த பாசியை அளித்த பெண்மணி கடந்த மாதம் ஜூலை 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த பெண்மணிக்கு தற்போது ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார பாஸ் வழங்க மக்களிடம் 200 முதல் 400 யூரோக்கள் வரை அவர் பெற்றோர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வரும் இந்த இக்கட்டான சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் அரசுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.