சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், அடுத்து வரும் நாட்களில் அதன் வீரியம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை. இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் கலக்கத்தில் உள்ளன.
குறிப்பாக, நேற்று (டிச.27) சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த 6 வயது மகன் மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்பவர்களுக்கு RT-PCR டெஸ்ட் கட்டாயம் என்று சிங்கப்பூரின் பிரபல செய்தி நிறுவனமான மீடியா கார்ப் தெரிவித்திருந்தது.
ஆனால், நேற்று (டிச.27) அவர்கள் மீண்டும் வெளியிட்ட செய்தியில், சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு PCR டெஸ்ட் கட்டாயம் என்ற தகவல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் தெரிவித்தனர்.
ஆனால், உண்மை நிலவரம் என்னவெனில், தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்கள் எவருக்கும் இந்த நிமிடம் வரை PCR டெஸ்ட் எடுக்கப்படவில்லை. அதேசமயம், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு Random முறையில் காய்ச்சல் பரிசோதிக்கப்படுகிறது.
அதில், காய்ச்சல் இருக்கும் பயணிகளுக்கு மட்டும் PCR டெஸ்ட் எடுக்கப்படுகிறது. மற்றபடி, சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் அனைவரும் PCR டெஸ்ட் கட்டாயம் என்பது உண்மையில்லை. நமது தமிழ் சாகா குழு சார்பாக, திருச்சி விமான நிலையத்தில் நேரடியாக விசாரித்ததன் மூலம் நமக்கு இந்த தகவல் தெரியவந்தது.
அதேபோல், சிங்கப்பூரில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கும் காய்ச்சல் சோதனை மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், வரும் ஜனவரி.1 முதல் சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்வதற்கும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கும் தேவையான Travel Documents என்னென்ன என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்வதற்கான Travel Documents:
Pass Port
Visa
Ticket
Vaccine Certificate (தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்கள்)
இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான Travel Documents:
Pass Port
Visa
Ticket
Vaccine Certificate
SG Arrival
சிங்கப்பூர் – இந்தியா இரு மார்க்கமாக பயணிப்பவர்களுக்கு PCR test கட்டாயம் கிடையாது என்பதால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணங்களை மட்டும் நீங்கள் பயணிக்கும் போது எடுத்துச் சென்றால் போதும்.
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360
“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”