கடந்த அக்.30ம் தேதி நள்ளிரவு திருச்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் இது.
திருச்சியில் இருந்து தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் Fly Scoot மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சிங்கப்பூருக்கு கிளம்புகின்றன. இந்த நள்ளிரவு 1.30 மணி Timing என்பது சில சமயங்களில் பயணிகளை குழப்பிவிடுகிறது. அதற்கு எடுக்கட்டாக விளங்கிய சம்பவம் தான் இது.
நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி விமான நிலையத்திற்கு பயணி ஒருவர் வந்திருக்கிறார். அவர் சிங்கப்பூர் செல்ல டிக்கெட் புக் செய்திருக்கிறார். Scoot விமானத்தில் டிக்கெட் புக்கிங் செய்திருந்த அந்த நபரின் பயண தேதி அக்டோபர் 30. நேரம் நள்ளிரவு 1.30 மணி.
இந்த டைமிங் படி, அவர் அக்.29ம் தேதி நள்ளிரவு ஏர்போர்ட் வந்திருக்க வேண்டும். அப்போது தான் 1.30 மணி 30ம் தேதிக்கான அவரது விமானமாக இருந்திருக்கும். ஆனால், அவர் 30ம் தேதி நள்ளிரவு ஏர்போர்ட் வந்ததால், அன்றிரவு 1.30 மணிக்கு கிளம்பிய விமானம், அக்.31ம் தேதிக்கான விமானம் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.
இந்த சிறிய குழப்பத்தால், அவர் ரூ.20,000 செலுத்தி பெற்ற டிக்கெட் வீணாய் போனது. இது குறித்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிர்வாக அதிகாரிகளிடம் பேசிய போது, ‘நீங்க தவறா வந்ததுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது. Refund கிடையாது’ என்று கூறிவிட்டனர். இதனால், நேற்று (அக்.31) மீண்டும் டிக்கெட் புக் செய்து அவர் வேறொரு விமானத்தில் சிங்கப்பூர் கிளம்பிச் செல்ல, இரட்டை செலவாகிப் போனது.
எனவே, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள், இந்த நள்ளிரவு நேரத்தில் டிக்கெட் புக் செய்திருந்தால், தேதியை சரியாக கவனித்து, ஏர்போர்ட் செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்.
எடுத்துக்கட்டாக நவம்பர்.2ம் தேதிக்கு, நள்ளிரவு 1.30 மணி விமானத்தை புக் செய்திருந்தால், நீங்கள் ஏர்போர்ட் செல்ல வேண்டிய தேதி நவம்பர் 2 அல்ல.. நவம்பர் 1. ஸோ, கவனமாக இருங்க! கரெக்ட்டா சிங்கப்பூருக்கு பயணம் பண்ணுங்க!