அண்டை நாடான இந்தியாவில் உள்ள திருச்சி விமான நிலையம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்துள்ளது என்றால் அது சற்றும் மிகையல்ல. அந்த வகையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் சிறிது நேரம் அந்த இடத்தையே சலசலப்புக்கு உள்ளாக்கியுள்ளது. நேற்று திருச்சியில் இருந்து துபாய் புறப்படவிருந்த விமானத்தில் ஏற தயாராக இருந்துள்ளார் ஒரு பயணி. விமான டிக்கெட், விசா, போர்டிங் பாஸ் என்று எல்லாமே தயார்நிலையில் இருக்க அவரும் Immigration முடிந்து விமானத்தில் எறியுள்ளார்.
ஆனால் அப்போது தான் நடந்துள்ளது ஒரு விபரீத சம்பவம், விமானத்திற்குள்ளே வரும் பயணிகளை பணிப்பெண்களோடு சேர்ந்து சில சமயங்களில் விமான பைலட்களும் வரவேற்பதுண்டு. அதுபோல நேற்று அந்த பயணி ஏறிய விமானத்திலும் அந்த விமானத்தின் பைலட் பயணிகளை வரவேற்றுள்ளார். இந்நிலையில் அந்த பயணி நேரே விமானியிடம் சென்று “ஆமா Flightகுள்ள உக்காந்து தம் அடிக்கலாமா என்று” தெனாவட்டாக கேட்க அதிர்ந்துபோன விமானி அந்த நபரை அலேக்காக கூட்டிவந்து திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைந்துள்ளார்.
அப்போது தான் அந்த பயணி மூக்கு முட்ட குடித்திருப்பது தெரியவந்துள்ளது, போதையில் தான் அவர் விமானியிடம் அப்படி பேசியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இறுதியில் முழுமையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு அந்த பயணியிடம் பயணிக்க அனைத்துவித ஆவணங்கள் இருந்ததாலும், குடிபோதையில் அவ்வாறு செய்ததற்கு மன்னிப்புகேட்டதாலும் அவர் மீண்டும் இன்று துபாய் அனுப்பிவைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நமது தமிழ் சாகா குழு அந்த பயணியை விமானநிலையத்தில் சந்தித்து ஏன் இப்படி நடந்துகொண்டார் என்று கேட்டோம். அப்போது “தனக்கு தாய், தந்தை யாரும் இல்லை.. என்னோட ரெண்டு தங்கச்சிகளையும் நல்ல படிக்க வச்சேன். அதுல ஒருத்தங்களுக்கு நல்ல இடத்தில் கல்யாணமும் நல்ல பிரமாண்டமான முறையில் செஞ்சுவச்சுட்டேன். இன்னொரு தங்கச்சிகூட நீ ஏன் கஷ்டப்படுற, கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கே பொழப்ப பார்னு தான் சொன்னாங்க. ஆனா இன்னும் உழைக்கணும் நான் தான் மீண்டும் துபாய் கிளம்பினேன்”.
“உண்மையில் நேற்று நான் நடந்துகொண்டது எனக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு” என்று கூறினார் அவர். தற்போது மீண்டும் அவர் துபாய் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. ஒற்றை வார்த்தையால் இவ்வளவு பெரிய விபரீதம் நடந்திருக்கும் நிலையில் பயணிகள் எப்போதும் ஜாக்கிரதையாக பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
97 71 477 360