TamilSaaga
venu arvind

சீரியலில் ராதிகாவுக்கு பெஸ்ட் ஜோடி.. பரிதாபமாக கோமாவுக்கு சென்ற வேணு அரவிந்த்.

சன் டிவியில் ஒளிப்பரப்பான அலைகள், செல்வி, வாணி ராணி சீரியல்களில் நடித்த நடிகர் வேணு அரவிந்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது அவரின் உடல்நலம் குறித்த செய்தியைக் கேட்டு சின்னத்திரை வட்டாரங்களில் உள்ளவர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

என்ன ஆனது வேணுக்கு?

வேணு அரவிந்த் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். பெரிய திரையில் சபாஷ் சரியான போட்டி என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். அதேபோல் மணிரத்னத்தின் பகல் நிலவு படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் பெரிய திரை அவருக்கு கொடுக்காத வரவேற்பை சின்னத்திரை வாரி வழங்கியது. சீரியல்களில் ராதிகாவுக்கு பெஸ்ட் ஜோடி என்றால் அது அரவிந்த் தான்.

இந்நிலையில் சமீப காலமாக சின்னத்திரையை விட்டு ஒதுங்கி இருந்த வேணு அரவிந்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. அதற்கான முறையான சிகிச்சையும் பெற்று அவர் குணமடைந்தார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு வேணு அரவிந்துக்கு திடீரென்று நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினார்கள். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார். சென்னை அப்பலோ மருத்துவமனையில் இருக்கும் வேணு அரவிந்துக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவரின் உடல்நலம் குறித்த மூத்த நடிகர் நடிகைகள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.

Related posts