இசைஞானி இளையாராஜாவின் உறவுப் பெண்ணான விலாசினியின் திருமண வாழ்வில் நிகழ்ந்த சிக்கல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா அவர்களின் மனைவியின் சகோதரர் மகள் விலாசினி. சமீபத்தில் தான் அவருக்கு சபரி ஞானபிரகாசம் என்ற நபருடன் திருமணம் நடந்தது. மிக சிறப்பாக அனைவரின் வாழ்த்துக்களோடும் ஊரே வியக்கும் வண்ணம் இவர்களது திருமண விழா நடைபெற்றது.
தற்போது கணவரால் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இவர்களது திருமண வாழ்க்கை விவகாரத்துக்கு சென்றுள்ளது. கணவர், விலாசினி அவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் மேலும் பல மோசடியான செயல்களில் ஈடுபட்டவர் என அறியாமல் திருமண செய்து கொண்டதாகவும் விலாசினி தெரிவித்துள்ளார். விவாகரத்துக்கு முக்கிய காரணம் சபரிக்கு வேறொரு பெண்ணுடனும் தொடர்பு இருப்பது தான் என கூறியுள்ளார்.
ஏற்கனவே தான் கருப்பாக இருப்பதால் VJ ஆகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தற்போது பாவம் கணேசன் என்ற சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதையும் அவர் வெளிப்படுத்தினார்.
திரையுலகில் மிகப்பெரியவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் சாதாரண மனிதர்களே. அவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் கஷ்டங்கள் இருப்பதெல்லாம் விசாரித்து பார்க்கும்போது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.