பிக்பாஸ் ஷோ பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் டிவி ஷோக்களில் இதுவும் ஒன்று. நமது சிங்கப்பூரில் இருந்து வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் ஷோவில் பிக்பாஸும் ஒன்று. கிடைக்கும் சில மணி ஓய்வு நேரத்தில் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற ஷோக்களை விரும்பிப் பார்ப்பது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் Ultimate ஷோவில் இருந்து அவர் விலகிக் கொண்டார். தான் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் பணி காரணமாக, விலகுவதாக கமல் அறிவித்தார். ஆனால், உண்மையான காரணம் என்னவென்பது அவருக்கே வெளிச்சம்.
அதேபோல், சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து தானாகவே வெளியேறிய வனிதா, ‘பிக்பாஸ் அல்டிமேட்’ ஷோ தவறான திசையில் செல்வதாக குற்றம் சாட்டினார். இந்த சூழலில் தான் நடிகர் சிம்பு பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்க என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் ஷோவின் போட்டியாளர்களில் ஒருவரான அனிதா சம்பத் பேசிய வார்த்தைகள் தற்போது சர்ச்சையாகியுள்ளது. (சர்ச்சை ஆகணும்-ங்குறதுக்கு தான பாஸ் பேசுறாங்க). ஆம்! அனிதாவிடம் சக போட்டியாளர் நிரூப் பேசிக் கொண்டிருந்த போது, “அந்த 2 பாட்டிலையும் எடுத்து உள்ளே வை” என்று கூறுகிறார். அதற்கு கடுப்பான அனிதா, ‘பின்பக்கத்தை குறிப்பிடும் வகையிலான வார்த்தையைச் சொல்லி “சூ…ல வைப்பாங்க.. போடா ம…” என கொச்சையாக பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் படி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அனிதாவா இப்படி பேசியுள்ளது என்பதே ரசிகர்களையும் தாண்டி, பிக்பாஸ் பார்வையாளர்களை ஷாக் அடைய வைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, சேனல் தரப்பு இந்த விஷயத்தை கொஞ்சம் சீரியஸாக அணுகுவதாகவும், அனிதாவுக்கு தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எச்சரிக்கை கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எது எப்படியோ… பாந்தமான முகத்துடன் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்த அனிதா, இப்படியொரு வார்த்தையை பொதுவெளியில் பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.