தடுப்பூசி போடப்படாத தொழிலாளர்கள் அடுத்த வருடம் ஜனவரி 15ம் தேதி முதல் பணியிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் தங்கள் பெருந்தொற்று Negative சான்றிதழை அளித்தலும் அவர்கள் தடுப்பூசி போடாதவரை அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சுகாதார அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெருந்தொற்று சோதனையில் எதிர்மறையாக இருந்தால் தவிர, தடுப்பூசி போடப்படாதவர்கள் ஜனவரி 2022 முதல் பணியிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சகம் கடந்த அக்டோபரில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : இந்தியாவை விட்டுக் கொடுக்காத “சிங்கப்பூர்
“முத்தரப்பு கூட்டாளர்களுடனான மதிப்பாய்வு மற்றும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, தடுப்பூசி போடப்படாத நபர்கள் பணியிடத்திற்குத் திரும்புவதற்கான PET சலுகையை ஜனவரி 15, 2022 முதல் நீக்க முடிவு செய்துள்ளோம்” என்று நேற்று இரவு 11 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் MOH தெரிவித்துள்ளது. மேலும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள் ஆனால் இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் – தடுப்பூசி முறையை முடிக்க ஜனவரி 31 வரை Grace Period வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த Grace Period காலத்தில் அவர்கள் அலுவலகத்திற்கு வரும்போது நெகடிவ் PET முடிவுகளுடன் வரவேண்டும். PET என்பது சிங்கப்பூரில் இந்த தொற்று காலத்தில் அமலில் உள்ள Pre-Event Testing ஆகும். அலுவலகம் வருபவர்களுக்கு இந்த PET சோதனைக்கு மானியம் வழங்குகிறது சிங்கப்பூர் அரசு. அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் புதிய நீண்ட கால பாஸ்கள், பணி அனுமதிச் சீட்டுகள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஒப்புதல் வழங்குவதற்கான நிபந்தனையாகவும் தடுப்பூசி இருக்கும் என்றும் MOH தெரிவித்துள்ளது ஏற்கனவே உள்ள பணி அனுமதிச் சீட்டுகளைப் புதுப்பிக்கும்போது தடுப்பூசியும் தேவைப்படும்.
விண்ணப்பத்தின் போது, MOH, பணி அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களின் முதலாளிகள், சிங்கப்பூர் வந்தடைந்தவுடன், அவர்களது ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையத்தின் (ICA) தடுப்பூசி சரிபார்ப்பு போர்டல் அமைப்பில் பதிவேற்றம் செய்வதன் மூலம் பாஸ் வைத்திருப்பவர்கள் தங்கள் சான்றிதழ்களைச் சரிபார்க்க வேண்டும். டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய சான்றிதழ்கள் இல்லாதவர்கள், பயணத்திற்கு முன் விமான நிறுவனங்கள், படகு நடத்துநர்கள் அல்லது சோதனைச் சாவடியில் தங்கள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.