சிங்கப்பூரில் ஒரு புலம்பெயர்ந்த வீட்டு உதவியாளர் பெருந்தொற்றல் பாதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து அவருடைய வயதான முதலாளிக்கு பெருந்தொற்று பரவிய நிலையில் 75 வயதாகும் அந்த முதலாளி கொரோனவால் இறந்துள்ள சம்பவம் சிங்கப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Feng Ah Ying என்ற 75 வயது மூதாட்டியின் மகன், வாங் ஷின் மின் டெய்லி செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் “40 வயதான அந்த புலம்பெயர்ந்த வீட்டு உதவியாளர் தனது பெற்றோருடன் டோவா பயோவில் ஐந்து ஆண்டுகளாகப் உடனிருந்து பராமரித்து வருகிறார்” என்று கூறினார்.
இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் தைப்பூச திருவிழா 2022”
இந்த 5 ஆண்டு காலகட்டத்தில், அந்த உதவியாளர் வயதான அந்த தம்பதியினருடன் நெருக்கமாக பழகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது முதலாளிகள் வயதானவர்கள் மற்றும் பெருந்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதை அறிந்த உதவியாளர் தனது சமூக தொடர்புடைய செயல்களில் மிகவும் கவனமாக இருந்துவந்துள்ளார். வார இறுதி நாட்களில் வெளியில் செல்வதைத் தவிர்த்து, வெள்ளிக்கிழமைகளில் மளிகைப் பொருட்களை வாங்க மட்டுமே அவர் வெளியில் சென்றதாகவும் வாங் கூறினார். கூடுதலாக, அவர் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடனேயே குளித்துவிடுவார் என்றும் அவர் கூறினார்.
இவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும், நவம்பர் நடுப்பகுதியில் அவருக்கு தொண்டை புண் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது, அதன்பிறகு நவம்பர் 18 அன்று தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டது. உடனடியாக அந்த உதவியாளர் அதே நாளில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டார், அதே நேரத்தில் வாங்-கின் பெற்றோர் ஆன்டிஜென் ரேபிட் சோதனையை (ART) மேற்கொண்டனர், நல்வாய்ப்பாக சோதனை முடிவுகளும் எதிர்மறையானது. இருப்பினும், ஃபெங் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்ததால், நவம்பர் 18-ம் தேதி, அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில், வாங்கின் தந்தை ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து நவம்பர் 20 அன்று, ஃபெங்கிற்கு பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நிலைமை ஆரம்பத்தில் நேர்மறையானதாகத் தோன்றியது – ஃபெங்கின் உடல்நிலை நிலையானது மற்றும் அந்த வாரங்களில் அவர் குணமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினார். அவரது தாயாருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது, ஆனால் காய்ச்சல் இல்லை என்று அவர் மேலும் கூறினார். ஆயினும், பின்னர் டிசம்பர் நடுப்பகுதியில் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 15ம் தேதி அதிகாலை 5 மணியளவில், NCID யிலிருந்து வாங்க்கு அழைப்பு வந்தது.
அவர் தனது தந்தை, பெருந்தொற்றில் இருந்து விடுபட்ட அந்த பணியாளர் ஆகியோருடன் மருத்துமனைக்கு சென்ற நிலையில் சுமார் காலை 6.45 மணியளவில் அவர் உயிரிழந்தார். ஃபெங்கின் மறைவு குறித்து வாங்கும் அவரது தந்தையும் துக்கமடைந்ததால், ஃபெங் தன்னிடம் இருந்து தான் அவருக்கு தொற்று பரவியது என்ற எண்ணத்தில் உதவியாளர் குற்ற உணர்ச்சியில் மூழ்கினார். வாங் சீன நாளிதழிடம், அவர்களின் உதவியாளர், குற்ற உணர்ச்சியுடன், ஃபெங்கின் வார்டுக்கு வெளியே மண்டியிட்டு அழுதார் என்று கூறினார்.
ஆனால் தனது அன்னையின் மரணத்திற்கு அவர் காரணமில்லை என்றும், மருத்துவ நிலைகளால் தனது தாய் தடுப்பூசி பெறாமல் இருந்தார் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து தனது குடும்பத்தில் ஒரு நபராக தனது தந்தையை அவர் தொடர்ந்து கவனித்துக்கொள்வர் என்றும் அவர் கூறினார்.