சிங்கப்பூரில் தற்போது வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனை நடத்துபவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது. அச்சுறுத்தல் இருந்து பாதுகாக்கும் POHA சட்டத்தின் கீழ் அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி தனியார் வாடகை கார் ஓட்டுனர்களும், கிருமித்தொற்று பரிசோதனை செய்பவர்களும் பொது சேவை ஊழியர்கள் என்ற பிரிவின் கீழ் சேர்க்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கல்வி அமைச்சகத்தின் பாலர் பள்ளிகள் CDA என்னும் ஆரம்பகால குழந்தைப்பருவ மேம்பாட்டு அமைப்பின் துணை நிறுவனங்கள் போன்றவற்றின் ஊழியர்களுக்கும் புதிய பாதுகாப்பு சட்டங்களின் கீழ் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2014ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது இந்த சட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூலை 7ம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றது.
இந்த சட்டத்தின் கீழ் தண்டனை பெறுபவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது 5000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.