TamilSaaga

முன்களப்பணியாளர்களை அங்கீகரிக்கும் தேசிய தினம் : அணிவகுப்பில் பங்கேற்க அழைப்பு

சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற இருக்கின்ற தேசிய தினத்தில் பங்கேற்க பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரை நோய்த் தொற்றில் இருந்து மீட்க பாடுபடும் முன்னிலை ஊழியர்கள் கிருமி பரவலுக்கு இடையிலும் சிங்கப்பூருக்கு சேவையாற்றும் தொண்டூழியர்கள் ஆகியோரை அங்கீகரிக்க இந்த ஆண்டு தேசிய தின விழாவில் அணிவகுப்பில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தின அணிவகுப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மெரீனா பே மிதக்கும் மேடையில் ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பு விழா நடைபெற இருக்கிறது.

நோய் தொற்று அச்சம் காரணமாக இந்த ஆண்டு அணிவகுப்பில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 1800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அவர்களும் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.

பங்கேற்பாளர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் அரசு கூறியுள்ளது. அவர்களுக்கு வாரம் ஒருமுறை நோய் நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Related posts