சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான முன்பதிவு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை ஏற்கனவே நமது Tamil Saaga-வில் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம். வரும் டிசம்பர் 2021 முதல் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 30 2022 வரை இதற்கான புக்கிங் நடைபெற்று வருகிறது.
இதில், டிசம்பர் மாதத்துக்கான டிக்கெட் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதேபோல், கிட்டத்தட்ட ஜனவரி மாதம் முதல் 15 நாட்கள் வரையிலான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது.
இன்னும் 24 மணி நேரத்தில் ஜனவரி மாதத்துக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், சிங்கப்பூர் டூ சென்னை செல்லும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே முற்றிலும் தீர்ந்துவிட்டது.
ஸோ, அடுத்த ஆண்டு(2022) பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்துக்கான டிக்கெட்டுகள் மட்டும் இப்போது மீதம் இருக்கிறது. எனவே, பயணிகள் விரைந்து பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்துக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Source : நந்தனா ஏர் ட்ராவல்ஸ் திருச்சி – 9600223091