கடந்த சில வாரங்களாக, சிங்கப்பூரின் MOM-ன் ACE குழுவானது, டிக்டோக் மற்றும் யூடியூப் போன்ற ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று சில போட்டிகளை நடத்தியது. இதில் TikTok போட்டிகள் மற்றும் ART பரிசோதனை கருவியை எப்படி உபயோகிப்பது என்பது பற்றிய தகவல் தரும் ஆன்லைன் டுடோரியல்கள் அடங்கும்.
இதுகுறித்து மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் “நாங்கள் சமீபத்தில் #SGMWCanAct என்ற TikTok போட்டியை நடத்தி முடித்தோம். அதில் எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்கள் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வெளியிட்ட காணொளிகளை பார்த்து அவர்களிடம் வேறு ஒரு திறமை இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்”.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மேலும் தளர்வு
இந்த போட்டிகளில் “மொத்தம் 15 வெற்றியாளர்கள் எங்கள் சமூகப் பங்காளிகளான Singtel மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் மூலம் பரிசுகளைப் பெற்றனர்.” வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசுகளை அவர்களுக்கு வழங்குவதற்கு உதவிய எங்கள் கூட்டாளர்களின் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்”.
எங்களது தற்போதைய TikTok போட்டியான #SGMWCanKeepSafe, நவம்பர் 12 முதல் டிசம்பர் 9 வரை நடைபெறும், இந்த தொற்றுநோய்களின் போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்த அவர்களின் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களை அழைக்கிறோம்.”