வரும் ஜூலை 31ம் தேதி வரை இந்தியாவில் பன்னாட்டு விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் பரவியுள்ள கொரோனா காரணமாக பன்னாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் சுமார் 16 மாதங்களாக பன்னாட்டு விமான சேவை முடங்கியுள்ளது. ஆனால் இந்த தடை காலத்தில் வந்தே பாரத் மற்றும் Air Bubbles சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சிவில் ஏவியேஷன் துரையின் இயக்குநர் ஜெனரல் வெளியிட அறிக்கையில் ‘ஜூலை மாதம் 31ம் தேதி இரவு 11.59 வரை பன்னாட்டு விமான சேவைகள் நிறுத்தப்படுகிறது. மேலும் இந்த தடை சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகமும் வரும் ஜூலை 21ம் தேதி வரை இந்திய விமானங்களுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.