சிங்கப்பூரில் தன்னுடன் தோழமையாக இருக்க ஒரு நாய் வேண்டும் என்று விரும்பி ஜாக் ரஸ்ஸல் டெரி என்ற நாயை தத்தெடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகு அந்த நாய் தனது வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துகிறது என்று கூறி அந்த நாயை 1,000 வெள்ளிக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் அவர் மேலும் இரண்டு மால்டிஸ் நாய்களை தத்தெடுத்து. அதில் ஒன்றை காரில் செல்லும்போதே தவறவிட்டு மற்றொன்றை இரண்டு நாட்கள் கழித்து தவறவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்டீவன் சியா ஷாவோ யி என்ற அண்ட் 42 வயது நபருக்கு, கடந்த புதன்கிழமை (அக்டோபர் 6) தனது இருப்பிடத்தை செல்லப்பிராணி விற்பனை கடையாக உரிமம் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு குற்றத்திற்காக 3,300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தனது நாயை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க தவறிய இரண்டாவது குற்றச்சாட்டும் அவர், மீது தீர்ப்பின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் தனது நாயை தவறவிட்டது தொடர்பான மூன்றாவது குற்றச்சாட்டு தண்டனையில் கருதப்பட்டது. ஜாக் ரஸ்ஸல் டெரியரை தத்தெடுப்பதற்கான பட்டியலை ஜூன் 2020 இல் ஃபேஸ்புக் பதிவில் சீஹ் கண்டதாக நீதிமன்றம் கேள்விப்பட்டது. அந்த நாயின் அசல் உரிமையாளர் அதை ஒரு நண்பரிடமிருந்து தத்தெடுத்துள்ளார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த நாய் தனது குழந்தைகளுடன் விரோதபோக்கை காட்டியதால் அந்த செல்லப்பிராணியை வளர்க்க முடியாது என்பதை உணர்ந்தார்.
இந்நிலையில் ஸ்டீவன் நாயை தத்தெடுத்த சில நாட்களுக்குப் பிறகு, அதன் அசல் உரிமையாளர் சீஹ் நாயை ஃபேஸ்புக்கில் 1000 டாலர் கட்டணத்தில் தத்தெடுப்புக்காக வைத்திருப்பதை கண்டுபிடித்தார். உடனடியாக அந்த நாயின் அசல் உரிமையாளர் சீஹாவை தொடர்பு கொண்டு, சீஹ் நாயை விற்க முன்வந்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் அவரோ அந்த நாய் தனது சோபாவைக் கீறிவிட்டு இடைவிடாமல் குரைப்பதாக பதிலளித்துள்ளார்.
உடனே அந்த நாயின் அசல் உரிமையாளர் அதே நாளில் சீஹாவின் வீட்டிற்குச் சென்று நாயைக் திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் சீஹா நாயின் தற்போதைய உரிமையாளர் நான் என்றும், அவர் விரும்பியதைச் செய்ய அவரால் முடியும் என்றும் கூறி அதை ஒப்படைக்க மறுத்துவிட்டார். இதனால் நாயின் முன்னாள் உரிமையாளர் தேசிய பூங்கா வாரியத்தின் (NParks) விலங்கு & கால்நடை சேவையில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார் மற்றும் அது குறித்து Facebookல் பதிவின் செய்தார்.