TamilSaaga

பாரிஸ் பறக்கும் முன் பக்கா பூஜை – பக்தி பரவசமான சென்னை விமானநிலையம்

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து பாரீஸுக்கு செல்லவிருந்த விமானத்திற்கு வேத மந்திரங்கள் ஒலிக்க பூஜை நடத்தப்பட்டுள்ளது. இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாரிஸ் நகரில் இருந்து டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு ஏர் பிரான்ஸ் விமான சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் இருந்து பாரிசுக்கு விமான சேவை இல்லாமல் இருந்தது.

https://www.youtube.com/watch?v=ONd-MkZs9sE

இந்நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நோக்கில் தற்போது வாரத்துக்கு ஒரு முறை இருமார்க்கமாக விமான அளிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 26ம் தேதி ஏர் பிரான்ஸ் நிறுவன விமானம் பாரிசில் இருந்து சென்னைக்கு வந்தது.

மீண்டும் நேற்று இந்தியாவின் சென்னையில் இருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு பாரிசுக்கு முதல் முறையாக மீண்டும் விமான சேவை தொடங்கியது. ஆனால் அந்த முதல் பயணத்திற்கு முன்பாக பயணம் இனிதே துவங்கவேண்டி பூஜை நடத்தப்பட்ட விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.

விமானத்தின் முன்பு இருநாட்டு விமான ஊழியர்கள் நிற்க, வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அறிவியல் வளர்ச்சி உச்சம் பெற்றலும் இதுபோன்ற நிகழ்வுகள் மனிதனுக்கு ஒரு ஆத்ம திருப்தியை தருகிறது என்றே கூறலாம்.

Related posts