பெருந்தொற்று சூழலால் தங்கள் பயணத்தை ரத்து செய்தவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான படித்தொகையை, மற்றும் பல கூறுகளை மறுபரிசீலனை செய்யப் போவதாக சிங்கப்பூர் காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உலக நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டு விமானப் போக்குவரத்துகள் தொடங்கப்பட்டுள்ள சூழலில் இந்த அறிவிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
கோவிட் பெருந்தொற்றின் விளைவாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள விரும்புவோரின் தேவைகளும் பரிசீலினைகளும் பெருமளவு மாறுபட்டிருப்பதை கருத்தில் கொண்டே காப்பீட்டு நிறுவனங்கள் இந்த முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ‘Personal Line at Income’ காப்பீட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆனி சுபா, ”கோவிட் பாதிப்புகள் ஓரளவு குறைந்து வந்தாலும் வெளிநாட்டுப் பயணங்கள் என்பது இன்னும் மிகுந்த தயக்கத்திற்கு உரியதாகவே இருந்து வருகிறது. காப்பீட்டு நிறுவனங்கள்மட்டுமின்றி நட்சத்திர தங்கும் விடுதிகள், விமான நிறுவனங்களும் பயண ரத்து மற்றும் பயண தொகையைதிருப்பிக் கொடுத்தல்தொடர்பான அவர்களின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் Income காப்பீட்டு நிறுவனம், கடந்த 2020 நவம்பர் முதல் தனது பயண காப்பீட்டு திட்டங்களில் வெளிநாடுகளின் மேற்கொள்ளப்படும், ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை மதிப்புள்ள மருத்துவ செலவுகள், ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வரையிலான மருத்துவ வெளியேற்றத்திற்கான செலவுகள் உள்ளடக்கிய காப்பீட்டு உறுதியிணையும் (coverage) இணைத்திருக்கிறது.
மேலும் சுவா அவர்கள், தனிமைப்படுத்துதலுக்கான உத்தரவு, வீட்டிலேயே இருப்பதற்கான அறிவிப்பு, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கோவிட் தோற்று ஏற்படுதல் போன்றவற்றால் ஏற்படும் இழப்பிற்கான காப்பீட்டு உறுதிகளைப் (coverage) பற்றியும் பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளார்.
AXA காப்பீட்டு நிறுவனத்தின் சில்லரை மற்றும் சுகாதார பிரிவின் நிர்வாக இயக்குனர் ஜூலியன் காலர்டு தெரிவிக்கையால், கோவிட் தொற்றுசூழலுக்குப் பிறகு பயணிகளின் தேவைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த பயங்கள், கேள்விகள் மாறுபட்டிருப்பதையும், அதிகரித்து இருப்பதையும் எங்களால் உணர முடிகிறது. Covid 19 ஒரு பெருந்தொற்று என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து “பொதுவாக விலக்கப்பட்ட தொற்றுநோய்” என்ற பிரிவில் காப்பீட்டு (coverage) பாதுகாப்புப் பெறுமுடிகிறது என்று குறிப்பிடுகிறார்.
AXA நிறுவனமானது டிசம்பர் 2020ல் AXA Smart Travel என்னும் காப்பீட்டு திட்டத்தையும், ஜூலை 2021ல் AXA Wanderlust ஏன்னும் காப்பீட்டு திட்டத்தையும் மேம்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மற்றொரு பெரிய காப்பீட்டு நிறுவனமான AIG Asia Pacific காப்பீட்டு நி்றுவனம் தனது Travel Guard என்னும் காப்பீடு திட்டத்தின் கோவிட் சிகிச்சைகள்,வெளியேற்றம் போன்ற அம்சங்களை இணைத்து புதுப்பித்து உள்ளது.
AIG நிறுவனத்தின் ஆட்டோ மற்றும் பயண பிரிவின் தலைவர் டியோ செர் ஃபூங் குறிப்பிடும் போது பயனாளரோ,அவரது உறவினரோ வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் போது covid-19 இருப்பது கண்டறியப்பட்டு, திட்டமிட்டதைவிட முன்கூட்டியே நாடு திரும்ப நேரிட்டால் பயணக் குறைப்பிற்கான தொகையை பெறுவது மற்றும் சிங்கப்பூருக்கு வெளியே Covid தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டால் அதற்கான கொடுப்பனவும் (allowance) இந்தத் திட்டத்தில் உள்ளடங்கும் என தெரிவித்துள்ளார்.
என்னதான் பயணக் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தக் கோவிட் தொற்று காலத்தினை முன்னிட்டு பல்வேறு கவரேஜ் சலுகைகள், விளக்குகள் உள்ளிட்டவைகளை அறிவித்திருந்தாலும், வெளிநாடு சென்று சிங்கப்பூர் திரும்பும்போது, திரும்பிய பிறகு பயனாளிகளுக்கு கோவிட் தொற்று இருப்பதாக அறிய வந்தால் அவர்களின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்பதை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.