சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட்ஸ் (MBS) ஒருங்கிணைந்த ரிசார்ட் உள்ளிட்ட பொது இடங்களில், முகமூடி அணிய தவறிய பெண் இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 6) மாவட்ட நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் விதிகளை மீறிய அந்த பெண்ணுக்கு 16 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கோவிட் -19 சர்க்யூட் பிரேக்கர் காலத்தில், கடந்த ஆண்டு ஒரு வெளியான ஒரு வீடியோ இணைப்பு மூலம் கண்டறியப்பட்ட ஃபூன் சியூ யோக் மீது முதலில் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மே 8ம் தேதி இரவு 7.20 மணி முதல் இரவு 8 மணி வரை நியூட்டன் ஹாக்கர் சென்டரில் மூக்கு மற்றும் வாய் பகுதியை மூடும் அளவிற்கு முகமூடி அணிய தவறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அவர் சிங்கப்பூரிலிருந்து பிரிட்டனுக்குச் சென்றார், கடந்த ஆண்டு ஜூன் 28ம் தேதியன்று அன்று மீண்டும் சிங்கப்பூர் திரும்பினார். அப்போது சிங்கப்பூரர் MBSல் 14 நாள் தங்குமிட அறிவிப்பின் கீழ் ஒரு அறையில் தங்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த பெண் ஜூன் 28ம் தேதி அன்று இரவு 8.07 மணிக்கும் 8.23 மணிக்கும் இடையில் அறையை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன் பிறகு, ஃபூன் ஹோட்டலில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தார், அவ்வாறு செய்யும் போது அவர் முகமூடி அணியவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 2 மற்றும் இந்த ஆண்டு மே 24 க்கு இடையில் மாநில நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே உட்பட மற்ற இடங்களிலும் அவர் இதே போன்ற குற்றங்களை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.