வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 9) இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் அல்லது பயணிக்கும் பயணிகளுக்கு மேலும் இறுக்கமான கோவிட் -19 சோதனைகள் அமலாகும் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சிங்கப்பூர் உலக நாடுகளை நான்கு வகைகளாக பிரித்துள்ளது. அந்த நான்கு வகை நாடுகளுக்கும் தனித்தனி விதிகளையும் சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது.
நான்கு வகைகளாக பிரிக்கப்பட்ட நாடுகளும் அவற்றுக்கான விதிகளை பின்வருமாறு காணலாம். இந்த கடுமையான கட்டுப்பாடுகள் பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆகிய அனைவருக்கும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வகை 1 : ஹாங்காங், மக்காவோ, மெயின்லேண்ட் சீனா மற்றும் தைவான்
வகை 2 : ஆஸ்திரேலியா, புருனே, கனடா, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் கொரியா குடியரசு
வகை 3 : ஆஸ்திரியா, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், எகிப்து, பின்லாந்து, இத்தாலி, ஜப்பான், லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, சவுதி அரேபியா, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து
வகை 4 : உலகின் மற்ற அனைத்து நாடுகளும் பிராந்தியங்களும் வகை நான்கில் அடங்கும் (இந்தியா உள்பட)
வகை II, III மற்றும் IV நாடுகள் அல்லது பிராந்தியங்களில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பெருந்தொற்று எதிர்மறை முடிவான PCR சோதனை முடிவை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
சிங்கப்பூர் வந்திறங்கியதும் அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு அவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுவார்கள் என்றும். வீட்டு தனிமைப்படுத்துதல் முடியும்போது அவர்களுக்கு மீண்டும் சோதனை நடத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அண்டை நாடான இந்தியா வகை நான்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே வகை நான்கில் உள்ள நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அதே கட்டுப்பாடுகள் இந்தியாவிற்கு பொருந்தும்.