TamilSaaga

“மகிழ்ச்சியில் சிங்கப்பூரின் CBD Hawkerகள்” – புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்க தொகை

சிங்கப்பூரில், சிங்கப்பூர் – மத்திய வணிக மாவட்டத்தில் உள்ள ஹாக்கர் மையங்களில் ஒரு புதிய அறிமுக திட்டத்தின் கீழ் மிகவும் அவசியமான வருமான ஊக்க தொகையை அந்த ஹாக்கர் மைய ஊழியர்கள் பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் உணவுகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் DBS வங்கியின் தத்தெடுப்பின் கீழ் இந்த ஹாக்கர் மையத் திட்டம் இன்று சனிக்கிழமை காலை (செப்டம்பர் 4) தஞ்சோங் பாகர் பிளாசா சந்தை மற்றும் உணவு மையத்தில் தொடங்கப்பட்டது.

அங்கு நாசி லெமக் மற்றும் சிக்கன் ரைஸ் உட்பட – சிங்கப்பூர் பொது மருத்துவமனை வளாகத்தில் விநியோகிக்க சுமார் 600 உணவு பொட்டலங்கள் தயார்படுத்தப்பட்டது. அதனையடுத்து அந்த உணவுகள் SGH மற்றும் அவுட்ராம் சமூக மருத்துவமனையின் முன் முன்கள பணியாளர்களுக்கும், SGH கட்டுமான தளத்தில் உள்ள தொழிலாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.

இந்த திட்டத்தில் வாராந்திர மொத்த கொள்முதல் DBS வாங்கி மூலம் வழங்கப்படுகிறது. மேலும் இதில் பங்கேற்கும் ஸ்டால் உரிமையாளர்களின் வருவாயை இந்த நிகழ்வு குறைந்தது 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்கள தொழிலாளர்களைத் தவிர, உணவு தேவைப்படும் குடும்பங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற தொண்டு குழுக்களுக்கும் இந்த உணவுகள் அளிக்கப்படுகிறது.

இந்த புதிய திட்டம், கடையின் வாடிக்கையாளர் அளவை விரிவாக்கும் என்று நம்பப்படுகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக, சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் தங்கள் வணிக இருப்பை வளர்க்க ஸ்டால் உரிமையாளர்களுக்கு DBS உதவும்.

Related posts