சிங்கப்பூரில் கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுடன் மக்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை அரசாங்கம் எடுத்து வருகிறது.
இத்தகைய சூழலில் மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தவோ அல்லது மேலும் கடுமையாக்கவோ வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் நிலையை ஆராய்ந்து கடைசி நிலையில் மட்டுமே தேவைப்பட்டால் கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான
அமைச்சுகளின் பணிக்குழுவினுடைய இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல்களை அமைச்சர் வோங் தெர்வித்தார்.
சில நாட்கள் முன்பாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து கோவிட் 19 தொற்று அதிகரிப்பது என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
தொற்று பரவும் நிலவரத்தை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.