சிங்கப்பூரில் புகிஸ் ஜங்ஷனின் சொத்து மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மற்றொரு கட்டிட பராமரிப்பு நிறுவனம் ஒரு திட்ட டெண்டரை வெல்ல உதவிய குற்றத்திற்காக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் அந்த நபர் வேலை செய்து வந்த நிறுவனம் “இது போன்ற நெறிமுறையற்ற செயல்களில்” ஈடுபடுகிறதா என்று சோதிக்க முயற்சி செய்ததாக சுப்ரமணியம் பன்னீர்செல்வம் பின்னர் தனது மேலதிகாரியிடம் பொய் உரைத்துள்ளார்.
சுப்பிரமணியத்துக்கு இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) அன்று நீதி மன்றத்தில் 45,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கோ பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை பொறுத்தவரையில் சுப்ரமணியம் தனது குற்றங்களைச் செய்தபோது மேலாண்மை நிறுவனத்தில் துணை மேலாளராக இருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. மேலும் தற்போது அவர் அந்த நிறுவனத்தில் பணியில் இல்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.
பாதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தில் சுப்பிரமணியன் பணிபுரிந்த போது ஒப்பந்தங்கள் அல்லது டெண்டர்கள், யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க சுப்ரமணியத்திற்கு அதிகாரம் இருந்தது. இருப்பினும் டெண்டர் குறித்த இறுதி முடிவு அவருடையது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.