தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதன் விளைவாக காபூல் நகரை அச்சம் சூழ்ந்துள்ள நிலையில், தனது குடிமக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து காப்பாற்றி வெளியேற்றும் நடவடிக்கையில் பிரான்ஸ் அரசு இறங்கியுள்ளது.
ஆப்கான் காபூலில் இருக்கும் பிரான்ஸ் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், பிரான்சின் பாதுகாப்பில் இருக்கும் மக்களும் அங்கிருந்து மீட்கப்படுவார்கள் என பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி தெரிவித்துள்ளார்.
காபூலிலிருந்து தூதரக அலுவலர்களும் வெளியேற்றப்பட்டு காப்பாற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளார் அமைச்சர் பிளாரன்ஸ்.
“நம் நாட்டுக்கு பெரிதும் உதவியாக இருந்த ஆப்கன் நாட்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் முதலானவர்களையும் மீட்க இருக்கிறோம்” என்றார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருக்கும் தன் மக்களை மீட்பதற்காக பிரான்ஸ் அரசு இரண்டு போர் விமானங்களை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.