TamilSaaga

மற்றொரு நபரின் தடுப்பூசி சான்றிதழை பயன்படுத்தாதீர்.. மீறினால் கடும் தண்டனை – சிங்கப்பூரில் அமைச்சர் எச்சரிக்கை

சிங்கப்பூரில் தடுப்பூசி சான்றிதழ் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஓங் யே குங் அவர்கள் ஒரு முக்கியமான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்தார்.

மற்றொரு நபரின் தடுப்பூசி சான்றிதழை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால், ‘கடுமையான தண்டனை’ விதிக்கப்படும் என்று ஓங் யே குங் எச்சரித்தார்.

உங்களுடையது என மற்றொரு நபரின் தடுப்பூசி சான்றிதழை காட்டுவதோ பயன்படுத்துவதோ சட்டவிரோதமானது என்றும் அவ்வாறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் கூறினார்.

இது போன்ற சில தவறான நடைமுறை நடந்து வருவதை அதிகாரிகள் அறிந்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 11 அன்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கூறினார்.

இந்த குற்றவாளிகள் பிடிபட்டால் “கடுமையான தண்டனையை” சந்திக்க நேரிடும் என்று ஓங் கூறினார்

ஆகஸ்ட் 10 ஆம் தேதி மீண்டும் உணவு மையங்கள் மற்றும் அமர்ந்து உண்ணுதல் ஆகியவை துவங்கியுள்ளதால் பேஸ்புக் பதிவில் சில “மனதின்” கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் பதிலளித்தார்.

Related posts