வியட்நாமுடன் சில வர்த்தக பயங்களுக்காக குறிப்பிட்ட சில சுற்றுலா தலங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை தளர்த்த அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது சிங்கப்பூர். இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ள அமைச்சர் விவியன் இருநாட்டு பயணக்கட்டுப்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடப்பட்டதாக தெரிவித்தார். இருப்பினும் வியட்நாம் நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் அளவை பொறுத்தே தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
மேலும் சுமார் 98 மில்லியன் மக்கள் வாழும் வியட்நாமில் இதுவரை இரண்டு விழுக்காடு மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏப்ரல் மாதத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது வியட்நாம் அரசு.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இருநாட்டு போக்குவரத்துக்கு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவின் தாக்கம் முற்றிலும் குறைந்தால் மட்டுமே சகஜ நிலைக்கு உலகம் திரும்பும் என்பது மறுக்கமுடியாத உண்மை.