TamilSaaga

போலி கல்விச்சான்றிதழ்களை அளித்த “Work Pass Holders” – சிங்கப்பூரில் வேலை செய்ய நிரந்தர தடை

சிங்கப்பூரில் கடந்த 2018 ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, இன்போகாம் டெக்னாலஜி துறையில் பணிபுரியும் 11 வேலைவாய்ப்பு பாஸ் மற்றும் எஸ் பாஸ் வைத்திருப்பவர்கள் மனிதவள அமைச்சகத்திற்கு (எம்ஓஎம்) தவறான தகுதி சான்றிதழைகளை சமர்ப்பித்ததாக கண்டறியப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது அவர்களின் பணி பாஸ் ரத்து செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் “சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் ITC துறையில் எத்தனை வேலைவாய்ப்பு பாஸ் மற்றும் “எஸ்” பாஸ் வைத்திருப்பவர்கள் போலி கல்வி தகுதி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர் என்று எம்.பி கன் தியாம் போவின் கேள்விகளுக்கு டாக்டர் டான் மேற்குறிய பதிலை அளித்தார்.

மேலும் MOM பணித்தேர்வு விண்ணப்பங்களை அங்கீகரிப்பதற்கு, உரிய மதிப்பாய்வு செய்து, உண்மைத்தன்மை வாய்ந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் மட்டுமே பணிபுரிகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அதன் நிறுவனங்களின் தரவுத்தளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட தகுதிகளை திரையிடுவதன் மூலம் கூடுதல் சோதனைகளை நடத்துகிறது மற்றும் அது போலி அல்லது அங்கீகரிக்கப்படாத தகுதிகளுடன் விண்ணப்பங்கள் வரும் நிலையில் அதனை நிராகரிக்கும் என்றார் டான். .

Related posts