TamilSaaga
epass

சிங்கப்பூர் E Pass வேலை வாய்ப்புக்கான வழிகாட்டி: அடிப்படை தகவல்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறை

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு பாஸ் Employment Pass (E Pass) என்பது சிங்கப்பூரில் வேலை செய்ய வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஒரு விசா ஆகும். இது திறமையான மற்றும் தகுதி வாய்ந்த வெளிநாட்டவர்களை சிங்கப்பூரில் வேலை செய்ய அனுமதிக்கும் ஒரு முக்கியமான ஆவணமாகும். சிங்கப்பூர் வேலைவாய்ப்பு பாஸ் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

சிங்கப்பூர் வேலை அனுமதி (Employment Pass) வழங்குவது தகுதி வாய்ந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு மட்டுமே, மேலும் அனைத்து நாட்டு மக்களுக்கும் இது வழங்கபடும். சிங்கப்பூர் நிறுவனங்களில் பணிபுரியத் தகுதியுள்ள மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்ட திறமையான தொழிலாளர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திலிருந்து செல்லுபடியாகும் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மாத சம்பளம் குறைந்தபட்ச சம்பளத் தகுதியை பூர்த்தி செய்ய வேண்டும். தற்போது இது $5,000 ஆகும். இது உங்கள் வயது மற்றும் தொழில்துறைக்கு ஏற்ப மாறுபடலாம்.

Employment Pass விண்ணப்பங்கள் ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் அல்லது வேலைவாய்ப்பு முகமை (EA) உரிமத்துடன் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் உலகளாவிய ஏஜென்சிகள் அல்லது அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் சரிபார்க்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம், தொழில்முறை நற்சான்றிதழ்கள் அல்லது சிறப்புத் திறன்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

Employment Pass காலாவதி:

  1. ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் செல்லுபடியாகும்.
  2. பின்னர் மேலும் 3 ஆண்டுகள் வரை புதுப்பிக்க முடியும்.

Employment Pass பிரிவுகளில் கிடைக்கும் துறைகள்:

  • தகவல் தொழில்நுட்பம் – Information Technology
  • நிதி – Finance
  • பொறியியல் – Engineering
  • சுகாதாரம் – Healthcare
  • கல்வி – Education
  • சட்டம் – Law
  • வணிகம் – Business
  • உற்பத்தி – Manufacturing
  • கட்டுமானம் – Construction
  • கடல்சார் மற்றும் கப்பல் கட்டுதல் – Marine and Shipbuilding

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Employment Pass விண்ணப்ப செயல்முறை:

தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள், வேலை அனுபவ சான்றிதழ்கள் போன்ற தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பதாரர் விவரங்கள்: உங்கள் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, வேலை அனுபவம் மற்றும் சம்பள விவரங்கள் போன்றவற்றை விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டும்.

MOM (Ministry of Manpower) உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, தேவையான ஆவணங்களை சரிபார்க்கும். உங்கள் தகுதிகள் மற்றும் முதலாளியின் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யும். எம்ப்ளாய்மென்ட் பாஸ் விண்ணப்பங்களுக்கான செயலாக்க நேரம் சமர்ப்பித்தவுடன் 2 முதல் 8 வாரங்கள் வரை இருக்கும்.

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு பாஸ் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு, சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (Ministry of Manpower – MOM) இணையதளத்தைப் பார்வையிடவும்: https://www.mom.gov.sg/

சிங்கப்பூர் S Pass வேலை வாய்ப்பு பற்றிய அடிப்படை தகவல்கள்: விண்ணப்பிக்கும் முறை

Related posts