சிங்கப்பூரில் முதன்முறையாக Manufacturing Sector மற்றும் Construction, Marine Shipyard, and Process (CMP) Sector ஆகியவற்றில் பணிபுரிவதற்காக வரும் மலேசியர் அல்லாத வேலைத் துறைப்பெறுமதிகள் (Work Permit Holders) மற்றும் In-Principle Approval (IPA) கொண்டிருக்கும் பணியாளர்கள், சிங்கப்பூர் அரசாங்கம் நடத்தும் Settling-In Programme (SIP) இல் கலந்து கொள்வது கட்டாயமாகும்.
இந்த SIP மூலமாக, அவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு உரிமைகள், கட்டாய சட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் பணி சார்ந்த முக்கிய தகவல்கள் பற்றி தெளிவாக அறிய வாய்ப்பு பெறுவார்கள். இது, புதிய பணியாளர்களின் செருகல் அனுபவத்தை எளிதாக்குவதற்கும், சிங்கப்பூரின் பணி நடைமுறைகளைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
SIP என்றால் என்ன?
சிங்கப்பூர் அரசாங்கம் நடத்தும் Settling-In Programme (SIP) என்பது, சிங்கப்பூரில் புதிதாக வேலைக்கு வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒரு அறிமுகத் திட்டமாகும். குறிப்பாக, Manufacturing Sector மற்றும் Construction, Marine Shipyard and Process (CMP) Sector களில் பணிபுரிவதற்கு வரும் மலேசியர் அல்லாத ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர்கள், மற்றும் சிங்கப்பூருக்கு திரும்பும் IPA (In principle Approval) வைத்திருக்கும் பணியாளர்கள் இந்த திட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
SIP திட்டத்தில் என்னென்ன கற்றுக்கொள்ளலாம்?
- சிங்கப்பூரின் வாழ்க்கை: வீட்டு வசதிகள், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி போன்ற அன்றாட வாழ்க்கை தொடர்பான தகவல்கள்.
- வேலை சார்ந்த விஷயங்கள்: வேலை நேரம், விடுமுறைகள், ஊதியம், சமூக பாதுகாப்பு, தொழில் சங்கங்கள் போன்ற விஷயங்கள்.
- சட்டம் மற்றும் ஒழுங்கு: சிங்கப்பூரின் சட்டங்கள், குறிப்பாக வேலை தொடர்பான சட்டங்கள் மற்றும் குற்றச் செயல்கள் குறித்த விழிப்புணர்வு.
- பாதுகாப்பு: வேலை இடத்தில் பாதுகாப்பு, தீயணைப்பு பாதுகாப்பு, மற்றும் இயற்கை பேரிடர் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்கள்.
ஏன் SIP திட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்?
- சுலபமான தகவல் பெறுதல்: ஒரே இடத்தில் பல்வேறு தகவல்களை பெறலாம்.
- சந்தேகங்களை நீக்குதல்: ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
- விரைவாக இணைந்து கொள்ள உதவுதல்: சிங்கப்பூரின் வாழ்க்கை முறைக்கு விரைவாக மாற்றிக்கொள்ள உதவும்.
- சட்டப் பிரச்சனைகளை தவிர்த்தல்: சட்ட விதிமுறைகள் குறித்த தெளிவான புரிதல் கிடைக்கும்.
- Manufacturing Sector இன் அனைத்து பணியாளர்கள் மற்றும் CMP sector களில் பணிபுரிய வரும் பெண் பணியாளர்கள், சிங்கப்பூருக்கு வந்த 2 வாரங்களுக்குள் இந்த SIP இல் கலந்து கொள்ள வேண்டும்.
- CMP Sector களில் பணிபுரிய வரும் ஆண் பணியாளர்கள் சிங்கப்பூரின் Onboard Centre க்கு வந்தவுடன் கலந்து கொள்ள வேண்டும்.
- ஒரு நாள் மட்டும். அனைத்து Migrant பணியாளர்களும் work permit வழங்கப்படும் முன் SIP இல் கலந்து கொள்வது கட்டாயம்.
-
Work Permit பெற்ற அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களும் சிங்கப்பூருக்கு வருகையிலிருந்து 14 நாட்களுக்குள் SIP திட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
SIP Registration
- பணி வழங்கும் நிறுவனம், Manufacturing Sector இன் அனைத்து பணியாளர்கள் மற்றும் CMP sectorகளில் பணிபுரிய வரும் பெண் பணியாளர்களுக்கு MWC website இல் இதற்காக பதிவு செய்ய வேண்டும்.
- CMP Sector களில் பணிபுரிய வரும் ஆண் பணியாளர்களுக்கு சிங்கப்பூரின் residential Onboard programme திட்டத்தில் இதற்காக பதிவு செய்ய வேண்டும்.
பணியாளர்களின் தாய் மொழியில் நடத்தப்படும்.
English
Bengali
Burmese
Mandarin
Tamil
Thai
Vietnamese போன்ற மொழிகளில் நடத்தப்படும்.
SIP இல் கற்பிக்கப்படும் விவரங்கள்
- Introduction to Singapore
- Local practices and social norms
- Employment laws
- Employment rights
- Working safely and Work Injury Compensation Act
- Key laws
- Mobile application orientation
- Remittance and unlicensed money lenders
- Primary Care Plan and Medical Centers for Migrant Workers
- Preventive health and living safely tips
- Mental health
- Recreation centers in Singapore
SIP திட்டம், சிங்கப்பூருக்கு புதிதாக வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட்டு, அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் தொழிலையும் வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள உதவும்.
மேலும் விவரங்களுக்கு: Foreign Worker Settling-in Programme (FW SIP)