TamilSaaga

சிங்கப்பூர் – இலங்கை 50ம் ஆண்டு அர­ச­தந்­திர உறவு கொண்டாட்டம் – இரண்டு அஞ்சல்தலைகள் வெளியீடு

உலக அளவில் இரு நட்பு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை சில சமயங்களில் டிப்ளமேடிக் relationship என்று அழைப்பார்கள். அதாவது அர­ச­தந்­திர உறவு என்று பொருள். இந்நிலையில் சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையேயான அரசதந்திர உறவின் 50 ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரண்டு சிறப்புமிக்க அஞ்சல்தலைகள் நேற்று வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் மற்றும் இலங்கையின் இந்த உறவு கடந்த 1970ம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு தினேஷ் குணவர்தனா அவர்களும், சிங்கப்பூரின் வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அவர்களும் மெய்நிகர் காணொளி வழியாக கலந்து கொண்டனர்.

‘கடல்த் துறை’ பாதுகாப்பு என்ற பொருளின் அடிப்படையில் இந்த அஞ்சல் தலைகள் இலங்கையிலுள்ள பல சுற்றுச்சூழல் அமைப்புகளையும் சிங்கப்பூரின் சதுப்பு நிலங்களையும் பிரதிபலிக்கும் இரண்டு அஞ்சல்தலைகள் ஆக வெளியிடப்பட்டுள்ளது.

Related posts