TamilSaaga

சிங்கப்பூர் பஸ்சில் பயணம் செய்பவரா நீங்கள்? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்!

டிசம்பர் மாதம் துவங்கி விட்டதால் சிங்கப்பூருக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கி உள்ளது. பணத்தை மிச்சப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலாப் பயணிகள் ஊர் சுற்றி பார்ப்பதற்காக பெரும்பாலும் பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துகளையே பயன்படுத்த துவங்கி விட்டனர். இதனால் காலை நேரங்களில் பொது போக்குவரத்துகளில் கூட்ட நெரிசல் அதிகரிக்க துவங்கி விட்டது.

சிங்கப்பூர் பயணிகளுக்க குட் நியூஸ் :

சுற்றுலாப் பயணிகள், உள்நாட்டு வாசிகள் என பஸ்சில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காலை நேரங்களில் நெரிசலில் மக்கள் அவசதிப்படுவதை தவிர்ப்பதற்காக காலையில் அலுவலகம், பள்ளி செல்லும் நேரங்களில் கூடுதல் பஸ்கள் மற்றும் ரயில்களை இயக்க சிங்கப்பூர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அது மட்டுமல்ல Travel Smart Journeys திட்டத்தின் கீழ் பயணிகள் சந்தோஷமான பயணத்தை அனுபவிக்க கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட உள்ளதாம். இதுவரை காலை 07.45 மணிக்கு துவங்கும் MRT பயணத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 சதவீத கட்டண சலுகையே அதிகமானதாக கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது 80 சதவீதம் வரை கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தை விரிவுபடுத்த உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் Chee Hong Tat சமீபத்தில் பேட்டி அளித்திருந்த நிலையில் தற்போது இந்த சலுகை கட்டண குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறை :

தற்போது வரை வட-கிழக்கு பாதையை பயன்படுத்தும் பயனாளர்கள் தான் பொதுவாக MRT ஐ பயன்படுத்துகிறார்கள். ஆனால் வார நாட்களில் காலை 7 முதல் 9 வரையிலான நேரத்தில் அவர்களும் குறிப்பிட்ட பஸ்களை மட்டுமே பயன்படுத்த சென்று விடுகிறார்கள். Tai Seng, MacPherson, Paya Lebar, Parkway Parade, Shenton Way or Marina Boulevard ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு 150 நிறுத்தங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்க SimplyGo ஆப்பை பயன்படுத்தி 5 சிங்கப்பூர் டாலர்கள் கொடுத்து பயணம் செய்து வருகிறார்கள்.

2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கூடுதல் பஸ்கள் இயக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இதனால் Punggol, Sengkang, Buangkok and Hougang MRT stations வழியாக பயணம் செய்பவர்கள் 80 சதவீதம் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய முடியும். காலையில் பரபரப்பான நேரங்களில் மாறி மாறி செல்வதாக இருந்தாலும் பயணம் எளிதாக இருக்கும். இந்த திட்டம் நிச்சயம் பொது போக்குவரத்து பயன்பாட்டாளர்களுக்கு பயனுள்ளதாகவும், அவர்களின் வரவேற்பை பெறுவதாகவும் இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த திட்டம் குறித்த விரிவான விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கட்டணம் செலுத்தும் முறை :

சிங்கப்பூரில் தற்போதுள்ள நடைமுறையின் படி, பஸ் அல்லது MRT/LRT போன்ற பொது போக்குவரத்துக்களை பயன்படுத்த பேங்க் கார்டுகள், மொபைல் வாலட்கள், வால்யு கார்டுகள், சலுகை கார்டு அல்லது பணம் ஆகியவற்றை பயன்படுத்தி தான் கட்டணம் செலுத்த முடியும். குழந்தைகளுக்கு பொது போக்குவரத்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. ஒருவேளை உங்களின் குழந்தையின் உயரம் 0.9 மீட்டருக்கும் குறைவாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

பொது போக்குவரத்து செலவை குறைக்க வழி :

பயண கட்டணம் என்பது கார்டு மூலம் செலுத்துவதற்கும் பணமாக செலுத்தும் முறைக்கும் மாறுபடும். 3.2 கி.மீ., வரையிலான தூரம் பயணிக்க கார்டு மூலமாக 1.09 சிங்கப்பூர் டாலர்களும், பணமாக என்றால் 1.90 சிங்கப்பூர் டாலர்களும் கட்டணமாக செலுத்த வேண்டும். 5 கி.மீ., வரையிலான தூரம் பயணிப்பதற்கு மட்டும் 2 சிங்கப்பூர் டாலர்களுக்கு மேல் செலவிட வேண்டும். நீங்கள் பயணிக்கும் தூர அளவை பொறுத்து பஸ் கட்டணமும் மாறுபடும். இந்த செலவை குறைத்து, பணத்தை மிச்சப்படுத்துவதற்காக சிங்கப்பூர் வரும் சுற்றுலா பயணிகள் பலரும் EZ Link card அல்லது சிங்கப்பூர் டூரிஸ்ட் பாஸ் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த முறையை பயன்படுத்தினால் 10 சிங்கப்பூர் டாலருக்குள்ளாகவே பயண செலவு அடங்கி விடும். சிங்கப்பூரின் எந்த பகுதியிலும் 24 மணி நேரமும் இதனை பயன்படுத்தி பயணம் செய்ய முடியும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts