TamilSaaga

சிங்கப்பூரில் நர்ஸ் வேலை! SNB-ல் பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள் மற்றும் அதன் செயல்முறைகள்!

சிங்கப்பூருக்கு நீங்கள் நர்ஸ் வேலைக்கு விண்ணப்பித்தால் முதலில் அரசாங்கத்தின் விதிமுறைப்படி SNB-ல் பதிவு செய்திருக்க வேண்டும். பின்னர் தேர்வு அதன் பின்னர் தான் உங்களுக்கு வேலை வழங்கப்படும். எப்படி சிங்கப்பூரில் நர்ஸ் வேலை பெறலாம் என்பது பற்றிய அடிப்படை தகவல்கள் நமது தமிழ் சாகா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்க்-கை க்ளிக் செய்து விவரங்களை அறிந்துகொள்ளவும்.

https://tamilsaaga.com/sg/how-to-get-nursing-job-in-sigapore/

எப்படி SNB-ல் விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? விண்ணப்பம் செய்தபின் என்னென்ன செயல்முறைகள் உண்டு என்பதைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்!

SNB-ல் பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள்:

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • பாஸ்போர்ட் அல்லது NRIC
  • திருமணச் சான்றிதழ் (திருமணம் முடிந்திருந்தால்)
  • நர்சிங் கல்வி பயின்ற Transcript Certificate
  • பயிற்சி அல்லது பட்டம் பெற்ற சான்றிதழ்
  • நர்சிங் பதிவுச் சான்றிதழ்
  • தற்போதைய நர்சிங்/பயிற்சி செய்து கொண்டிருப்பதற்கான லைசன்ஸ்
  • ஏற்கனவே வேலை செய்த மருத்துவ நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட கடிதம் (அனுபவம், வேலைக்காலம், வேலை முறைமை என அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்)

ஆவணங்களை சமர்பிக்கும்பொழுது கருத்தில் கொள்ளவேண்டியவை!

  • அனைத்து ஆவணங்களும் ஆங்கிலத்தில் இருப்பது அவசியம்.
  • சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் நகல் உண்மையானவை தான் என கண்டறிய அதில் True Copy அங்கீகாரம் அவசியம். இது அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் Stamping செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட அதிகாரியின் பெயர் விபரங்களும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • Stamping செய்யும் முன் எடுக்கப்பட்ட எந்த நகல்கலும் செல்லுபடியாகாது.
  • நகல் எடுக்கப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் மட்டுமே செல்லுபடியாகும். நேரடியாக FAX அல்லது E-mail மூலம் அனுப்பப்பட்ட ஆவணங்கள் செல்லுபடியாகாது.
  • சரியான ஆவணங்கள் சமர்பிக்கப்படாத பட்சத்தில் உங்கள் விண்ணப்பம் தாமதமாகலாம்.

பதிவை சரிபார்த்தல்:

  • இந்த செயல்முறையில் விண்ணப்பதாரர் படிக்கும் பொழுதோ அல்லது வேலை செய்யும்பொழுதோ ஏதேனும் தவறுகள் நேர்ந்து அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை குறித்து சரிபார்ப்பர்.
  • முதலில் விண்ணப்பதாரர் பதிவு செய்த நாட்டின் நர்சிங் ரெஜிஸ்டரேசன் அமைப்பு, பணிபுரிந்த மருத்துவ நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனம் போன்ற இடங்களுக்கு அவர்களைப் பற்றிய சரிபார்ப்புக் கடிதம் அனுப்பப்படும்.
  • மேற்கண்ட அமைப்புகள் நேரடியாக கடிதம் அனுப்பிய சிங்கப்பூர் பதிவுதாரருக்கு கடிதம் மூலம் தகவல்களை தெரியப்படுத்த வேண்டும்.

கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு:

  • முதலில் நீங்கள் நர்சிங் கல்வி பயின்றதற்கான Transcript Certificate சரிபார்க்கப்படும்.
  • Transcript Certificate-ல் விண்ணப்பதாரர் பயின்ற Theory மற்றும் Practical பிரிவுகளுக்கான கால வரையறை குறித்த தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும். (மணி அல்லது வாரக் கணக்கில்)
  • விண்ணப்பதாரரின் Transcript Certificate நேரடியாக SNB பதிவு அதிகாரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
  • தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும்.
  • விண்ணப்பம் குறித்த அப்டேட் வேலை நிறுவனத்திற்கு அனுப்பப்படும். அவர்கள் மூலம் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும்.

மேற்கண்ட அனைத்து செயல்முறைகளும் முடிந்த பின்னர் தான் SNB Licensure தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு முடிந்த பின்னர் முடிவுகள் அடிப்படையில் வேலை அளிக்கப்படும்.

சிங்கப்பூரில் நர்சிங் வேலைக்கு வர நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வழிமுறைகளைப் பற்றி முதலில் அறிந்து கொண்டு இந்த பதிவில் உள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கவும். நன்றி!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts