TamilSaaga

இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விசா தளர்வு! தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல தயாராகுங்கள்!

தாய்லாந்தின் தற்போதைய அறிவிப்பின்படி இந்தியர்கள் இரண்டு மாத காலம் வரை விசா இல்லாமல் அங்கு சுற்றுலா சென்று வர முடியும். ஏற்கனவே விசா இல்லாமல் தாய்லாந்திற்கு பயணம்மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் பல்வேறு இந்தியர்களின் விருப்பமான சுற்றுலாத் தளமாக தாய்லாந்து இருந்து வருகிறது. 

தற்பொழுது அந்த கால வரையறை 2 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தாய்லாந்து அரசாங்கத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது அந்த நாட்டின் சுற்றுலாத் துறை. உலகெங்கும் இருந்து ஏராளமான மக்கள் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல விரும்புவர். அங்கு உள்ள bangkok தான் பலரின் விருப்பமான சுற்றுலாத்தளமாகும். 

கொரோனா காலத்தில் பெரிதும் முடங்கி இருந்த இந்த நாட்டின் சுற்றுலா அம்சத்தை மீண்டும் மேம்படுத்த இந்தியா உள்பட ஏறத்தாழ 93 நாடுகளுக்கு இது போன்ற விசா தளர்வை அறிவித்துள்ளது தாய்லாந்து அரசாங்கம். இது தவிர Remote-ஆக தாய்லாந்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 180 நாட்கள் அதாவது 4 மாதங்கள் வரை விசா தளர்வை அறிவித்துள்ளது.

இதன் மூலம் தாய்லாந்தின் சிறப்பு வாய்ந்த இடங்களைப் பார்வையிடவும், அதன் பழமையான கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும் பல மக்களை ஈர்க்க அந்த நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

புள்ளிவிவரப்படி 2023-ஆம் ஆண்டில் மட்டும் 24.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தாய்லாந்து வந்து சென்றுள்ளனர். தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விசா தளர்வால் இந்த ஆண்டு 25 முதல் 30 மில்லியன் சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது! 

தாய்லாந்து செல்ல விரும்பும் மக்கள் காண வேண்டிய முக்கியமான சில இடங்கள்!

  1. Bangkok 
  2. Chiang Mai 
  3. Phuket 
  4. Ayutthaya 
  5. Sukhothai 
  6. Krabi 

Bangkok :
தாய்லாந்தின் தலைநகரமான இந்த Bangkok தான் தாய்லாந்தின் சுற்றுலா தலங்களுள் மிக முக்கியமானது. நவநாகரீகமும் அதே நேரத்தில் நாட்டின் பழமை வாய்ந்த கலாச்சாரமும் இங்கு மிக சிறப்பாகவே இருக்கும். இங்கு உள்ள மார்கெட்டுகள், உணவு வீதிகள் தான் பலரின் ஃபேவரெட்! வித விதமான பொருட்கள் பல்வேறு வகையான உணவுகள் என இங்கு காண ஏராளமான பொழுதுபோக்குகள் உண்டு!

Chiang Mai :
தாய்லாந்தின் வடக்கு மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் பழமையான கோவில்கள், கலாச்சாரங்களுக்கு பெயர்போனது. இங்கு உள்ள அழகிய மலைப்பகுதிகள், கோவில்கள் என அனைத்தும் பலருக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கக்கூடியவை. 

Phuket:
Phuket தான் தாய்லாந்தில் மிகப்பெரிய தீவாகும். அழகிய கடற்கரை மற்றும் தெளிவான கடல் நீர் என அருமையான அனுபவம் தரக்கூடிய இடமாக இந்த Phuket தீவு இருந்து வருகிறது. patong, kata மற்றும் karon போன்றவை இங்கு உள்ள பிரபலமான கடற்கரைப் பகுதியாகும்.

Ayutthaya:
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள Ayutthaya ஒரு காலத்தில் சியாம் ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்தது.  இங்கு உள்ள கோவில்கள், சிலைகள் மற்றும் அரண்மனைகள் தாய்லாந்தின் பண்பாட்டு மற்றும் வரலாற்று மரபுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது.

Sukhothai:
13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாய்லாந்தின் முதல் தலைநகரத்தின் பழமையான பல இடங்கள் Sukhothai-ல் உள்ளது. இங்கே பாதுகாக்கப்பட்ட கோவில்கள், புத்தர் சிலைகள் மற்றும் சிற்பக் கலைகள் போன்றவற்றைக் கொண்டுள்ள வரலாற்றுப் பூங்காவைக் காணலாம்.


Krabi:
அந்தமான் கடற்கரை பகுதியில் உள்ள கிராபி, அதன் அழகான சுண்ணாம்புக் கற்சுவர்கள், பச்சை நீர்ப்பாசிகள், மற்றும் தெளிவான கடற்கரைகளுக்காக பிரபலமானது. இங்கே உள்ள நீர்நிலைகள், குகைகள் போன்ற இயற்கை அமைப்புகள் ஏராளமாக உள்ளன. இங்கு உள்ள கடற்கரைகளில் படகு சவாரி செய்வது பல மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts