கட்டிட வேலை, கப்பல் பணி மற்றும் இயந்திரங்களைக் கையாளும் பணி போன்றவற்றிற்கு சிங்கப்பூர் வரும் தொழிலாளர்கள் அனைவரும் BCA எனப்படும் Building & Construction Authority- யால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகளை முடித்திருக்க வேண்டியது அவசியம். இதில் இரண்டு நிலைகள் உள்ளன. Basic Skilled மற்றும் Higher Skilled.
இந்த இரு நிலைகளிலும் பல்வேறு பயிற்சிகள் உள்ளன. Basic Skilled எனப்படும் அடிப்படைப் பயிற்சி அனைத்து கட்டிட தொழிலாளர்களுக்கும் பொதுவான பயிற்சியாகும். Higher Skilled என்பது ஏதேனும் ஒரு பிரிவில் அதாவது வெல்டிங், கார்பென்டிங், ப்ளம்பிங் மற்றும் எலெக்ட்ரிக்கல் என ஏதேனும் ஒன்றில் அவர் சிறந்தவராக இருந்தால் மேலும் சிறிது பயிற்சியளிக்கப்பட்டு அவர்களின் திறன்கள் சோதிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ்கள் தான்குறிப்பிட்ட பிரிவில் அவரை தேர்ந்தவர் என்பதைக் காட்டும்.
இது போன்ற பயிற்சியை முடித்த பணியாளர்களுக்கு Work Permit எனப்படும் விசா வழங்கப்பட்டு அவர்கள் Skilled Workers -ஆக பணியமர்த்தப்படுவர். இவர்களின் ஊதியமும் 2000 SGD க்கு மேல் இருக்கும்.
அதெல்லாம் சரி இந்த பயிற்சிகளை எப்படி முடிப்பது. எங்கே படிப்பது? என்றெல்லாம் யோசிக்கறீங்களா? தொடர்ந்து படியுங்க பதில் கீழே இருக்கு.
BCA – வால் அங்கீகரிக்கப்பட்ட பல பயிற்சி மையங்கள் சிங்கப்பூரில் உண்டு. அதற்கான விவரங்களை BCA இணையதளத்தில் காணலாம். சிங்கப்பூர் சென்றால் தான் இந்த பயிற்சிகள் எல்லாம் சாத்தியமா? இந்தியாவில் இருந்தே படிக்க முடியாதா? என்ற கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம்.
ஆம்! இந்தியாவிலும் இதற்கான பல பயிற்சி மையங்கள் உண்டு. சாதாரண பயிற்சி மையங்களும் இது போன்ற திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்குகின்றன. அதற்கான சான்றிதழ்களையும் வழங்குகின்றன. ஆனால் அவை அனைத்தும் BCA-வால் ஏற்றுக்கொள்ளப்படாது.
BCA அங்கீகரித்த குறிப்பிட்ட பயிற்சி மையங்களின் சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே இதுபோன்ற திறன் சார்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் மொத்தம் 3 பயிற்சி மையங்கள் BCA-வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவை சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் மட்டுமே உள்ளது.
இங்கு மொத்தம் 41 பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இது குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள பயிற்சி மையம் மற்றும் அதன் விவரங்கள்:
Hytech Goodwill Training And Testing Centre Private Limited, Chennai
இங்கே மொத்தம் 16 விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
1) Aluminium Formwork (Enhanced)
2) Doors & Windows Installation (Timber)
3) Ducting Installation for Air-Con & Ventilation
4) Electrical Wiring Installation
5) Interior Drywall Installation
6) Pipe Fitting
7) Plastering
8) Plumbing & Pipefitting
9) Precast Kerb & Drain Laying
10) Steel Reinforcement Work
11) Structural Steel Fitting
12) Suspended Ceiling Installation (Acoustical)
13) Thermal Insulation (Pipework)
14) Tiling
15) Timber Formwork (Enhanced)
16) Waterproofing
ஹைதராபாத்தில் அமைந்துள்ள பயிற்சி மையம் மற்றும் அதன் விவரங்கள்:
TTJ Test Centre, Telengana
இங்கே மொத்தம் 13 விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
1) Aluminium Formwork (Enhanced)
2) Electrical Wiring Installation
3) Fibre Optics Installation
4) Pipe Fitting
5) Plastering
6) Plumbing & Pipefitting
7) Steel Reinforcement Work
8) Structural Steel Fitting
9) Suspended Ceiling Installation (Acoustical)
10) Thermal Insulation (Pipework)
11) Timber Formwork (Enhanced)
12) Waterproofing
13) Welding
கொல்கத்தாவில் அமைந்துள்ள பயிற்சி மையம் மற்றும் அதன் விவரங்கள்:
HTTC Overseas Testing Centre, Kolkata
இங்கே மொத்தம் 12 விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
1) Aluminium Formwork (Enhanced)
2) Ducting Installation for Air-Con & Ventilation
3) Electrical Wiring Installation
4) Fibre Optics Installation
5) Pipe Fitting 6) Plastering
7) Plumbing & Pipefitting
8) Steel Reinforcement Work
9) Suspended Ceiling Installation (Acoustical)
10) Thermal Insulation
11) Tiling
12) Timber Formwork (Enhanced)
மேற்கண்ட அனைத்து பயிற்சிகளையும் நீங்கள் இந்தியாவில் பயில முடியும். இது போல ஒவ்வொரு நாடுகளிலும் பல பயிற்சி மையங்கள் உண்டு. நீங்கள் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வேலைக்கு வர விரும்பினால் மேற்கண்ட ஏதேனும் பயிற்சியை முடித்து, சான்றிதழ் பெற்றாக வேண்டும்.
BCA-வின் அதிகாரபூர்வ இனைய தளத்தில் இதற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். இந்தியாவில் இருந்தபடி இந்த பயிற்சி மையங்களுக்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம். தனிப்பட்ட முறையிலோ அல்லது உங்கள் நிறுவனம் மூலமாகவோ இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஒருவேளை நீங்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்தால், நீண்ட காலம் காத்திருக்க நேரிடும். மிக மிகக் குறைந்த பயிற்சி மையங்கள் மட்டுமே இருப்பதால் ஒரு பிரிவினருக்கு முடித்த பின்னரே அடுத்தடுத்த பிரிவினருக்கு பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த பயிற்சிகளுக்கு இந்திய மதிப்பில் தோராயமாக 1 முதல் 2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த பயிற்சிகளை சிங்கப்பூர் சென்றும் படிக்கலாம். ஆனால் அதற்க்கு Pre-Approval என்ற ஆவணம் உங்கள் வேலை நிறுவனத்தால் வழங்கப்பட வேண்டும். அதன்பின் நீண்ட செயல்முறைகளுக்கு பின்னரே ஒரு கட்டிட தொழிலாளி பணியமர்த்தப்படுவர். இது குறித்த விரிவான தகவல்கள் நமது தமிழ் சாகா பக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்து “ எப்படி சிங்கப்பூரில் கட்டிடத் தொழிலாளிகள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
https://tamilsaaga.com/jobs/how-construction-site-workers-are-hired/