சிங்கப்பூரில் இன்று (ஜூலை 26) புதிதாக 135 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் Jurong Fishery Port கிளஸ்ட்டரில் தான் அதிக அளவில் தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூரோங் கிளஸ்ட்டரில் மட்டும் 61 பேருக்கு தொற்று உறுதியானது. கடந்த ஆண்டு ஜூலை ஆகஸ்ட் 10ம் தேதி சிங்கப்பூரில் 188 பேருக்கு தொற்று உறுதியானது. அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் பதிவான அதிக அளவிலான தொற்று சம்பவங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 6 பேர் உளப்பட நாட்டில் இன்று 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பலரிடம் தொற்று பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை கடுமையாகிவருகின்றது சிங்கப்பூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவரை சிங்கப்பூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 64,314 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 524 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிங்கப்பூரில் இதுவரை 37 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.