TamilSaaga

அதிரடி Discount அறிவித்திருக்கும் Flyscoot நிறுவனம்!சென்னை,திருச்சி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களுக்கும் பொருந்தும்.

இந்த 2024 ஆம் ஆண்டு நீங்கள் சுற்றுலா செல்ல அல்லது உங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறீர்களா? உங்களுடைய விமான பயண செலவில் 20% குறைக்க சரியான தருணம் இது. ஆம் சிங்கப்பூரின் பிரபலமான பிளைஸ் கூட் (flyscoot) நிறுவனம் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நீங்கள் உங்களுடைய விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது 20% தள்ளுபடியுடன் கட்டணத்தை செலுத்தலாம். இந்த தள்ளுபடியை எவ்வாறு பயன்படுத்த முடியும், எந்தெந்த ஊருக்கு செல்வோர் இதை பயன்படுத்த முடியும் என்று பார்க்கலாம்.

பிளைஸ் கூட் (flyscoot) நிறுவனம் மொத்தம் 58 நகரங்களுக்கு இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதாவது சிங்கப்பூரிலிருந்து இந்த 58 நகரங்களுக்கு செல்வோர் தங்களுடைய விமான பயணச் செலவில் 20% குறைத்து கட்டணத்தை செலுத்தலாம். உங்களுடைய பயண சீட்டை முன்பதிவு செய்யும்போது அதாவது கட்டணம் செலுத்தும் போது நீங்கள் DBS/POSB கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவதன் மூலம் உங்களுடைய பயண கட்டணம் 20% குறையும்.

இந்த தள்ளுபடி வரும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை பெற முடியும். அந்த தேதிக்குள் நீங்கள் இந்த ஆண்டுக்கான உங்களுடைய பயண தேதியை திட்டமிட்டு குறைந்த செலவில் உங்கள் பயணச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் இந்தியாவிற்கு செலவிருக்கிறீர்கள் என்றால் கீழ்க்கண்ட நகரங்களுக்கு இந்த தள்ளுபடி. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு நீங்கள் விமான சேவையை இந்த தள்ளுபடி கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம்.

நீங்கள் இந்த தள்ளுபடியை பெற வேண்டும் எனில் https://www.flyscoot.com/promotions/dbs இன்று இணையதளத்தில் சென்று முன் பதிவு மேற்கொள்ள வேண்டும். மற்ற இணையதளங்களில் இந்த சேவையை நீங்கள் பெற இயலாது. நீங்கள் DBS/POSB கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்துபவர் என்றால் மட்டுமே இந்த தள்ளுபடியை பெற முடியும். இந்த சலுகை குறுகிய கால கட்டத்திற்கு மட்டுமே, அதோடு குறைந்த இருக்கைகளே உள்ளன.

நீங்கள் ஒரு முறை உங்களுடைய இருக்கையை முன் பதிவு செய்து பிறகு அதில் மாற்றம் செய்ய முடியாது. முன்பதிவு செய்யும்போது நீங்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். நாணய ஏற்ற இறக்கங்கள் காரணமாக வரிகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. நிபந்தனைகளை ரத்து செய்ய அல்லது திருத்துவதற்கான உரிமையை கொண்டுள்ளது பிளைஸ் கூட் (flyscoot) நிறுவனம். எனவே,

இன்றே உங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்து, தள்ளுபடியை அனுபவிக்கவும்.

Related posts