TamilSaaga

சிங்கப்பூரின் பொழுதுபோக்கு அம்சங்களில் மற்றும் ஒரு மணிமகுடம்…. இனி பஸ்ல ஜாலியா படுத்துகிட்டே ரெஸ்ட் எடுக்கலாம்!

சிங்கப்பூர் என்றாலே பொதுவாகவே பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அதற்காக தான் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருமந்தோறும் சிங்கப்பூருக்கு வருகின்றனர். மக்கள் பொழுது போக்கிற்காக சிங்கப்பூரில் செலவிட ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. அதில் மற்றும் ஓர் அங்கமாக இன்னொரு புது முயற்சியை சிங்கப்பூர் அரசு தொடங்கியுள்ளது.

அதாவது பேருந்து வடிவில் சொகுசு ஹோட்டல் சாங்கி வில்லேஜ் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. உண்மையாகவே பேருந்தில் ஏறுவது போலவே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் ஆனது கட்டடம் போல இல்லாமல் பேருந்து போலவே நிறுத்தப்பட்டிருக்கும். பேருந்துக்குள் ஏறினால் மட்டுமே பார்ப்பதற்கு ஹோட்டல் போன்று இருக்கும்.இந்த புது முயற்சி ஆனது தெற்கு ஆசியாவில் தொடங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் . இதற்காக பயன்படாத நிலையில் இருந்த 20 பேருந்துகள் நவீன ஹோட்டல் அறைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகளில் உண்மையான ஹோட்டல்களில் இருப்பது போலவே இருக்கைகள், சோபா போன்ற அனைத்து வசதிகளும் இருக்கும். இந்த ஹோட்டல் சிங்கப்பூரில் அடுத்த மாத முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு 398 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts