இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பற்றி எரியும் காட்டுத்தீயின் காரணமாக சுமத்ரா பகுதி முழுவதும் கடுமையான புகைமூட்டம் நிலவுவதாக அந்நாடு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. மேலும் காட்டு தீ பற்றி எரியும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாக தற்பொழுது வரை சிங்கப்பூரில் கடுமையான புகைமூட்டம் ஏற்படவில்லை என்றாலும் காட்டு திசை மாறி வீசும் பொழுது காற்று தர குறியீடு மோசமாக கூடும் என சுற்றுச்சூழல் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்பொழுது நிலவரப்படி சிங்கப்பூரின் காற்று மாசு குறியீடு 81 என பதிவாகியுள்ள நிலையில் காற்று மாசுபாடு மிதமான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மெரீனா பே வட்டாரத்தில் லேசான புகைமூட்டம் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே மக்கள் வீட்டை விட்டுவெளியேறும் பொழுது காற்றின் தரத்தை உறுதி செய்து பின்பு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் சுவாசக்கோளாறு,ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனை உள்ள பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.