TamilSaaga

வெளிநாட்டு ஊழியரின் உழைப்பிற்கு சிங்கப்பூரில் கொடுக்கப்பட்ட மரியாதை… முகமலர்ச்சியுடன் காணப்பட்ட வெளிநாட்டவர்கள்!

சிங்கப்பூரில் வருடம் தோறும் நடைபெறும் எஃப் ஒன் கார்பந்தயமானது மிகவும் பிரபலமானதாகும். இதை காண்பதற்காகவே உலகெங்கிலும் இருந்து பலர் வருகை தருவதுண்டு. ஏன் ஆண்டுதோறும் தவறாமல் வருவோரும் இருக்கின்றனர். ஆனாலும், இதை காண்பதற்கான வாய்ப்பானது அனைவருக்கும் கிட்டாது.

ஏனென்றால் பந்தயத்தை காண்பதற்கான நுழைவுச்சீட்டு கிடைப்பது மிகவும் அரிதாகும். அப்படி இருக்கும் பொழுது இதுவரை வெளிநாட்டவர்களுக்கு கிட்டாத வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளது. F1 பந்தயத்திற்கான தளத்தையும் மற்றும் பாதைகளையும் அமைத்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு பந்தயத்தை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. செப்டம்பர் 15 ஆம் தேதி மதிய நேரத்தில் பந்தயத்தை நேரில் காணும் வாய்ப்பு ஊழியர்களுக்கு கிடைத்தது.

ஊழியர்களின் அயராத உழைப்பினால் கார் பந்தய தளம் உருவாகியுள்ளதால் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தயத்தை நேரில் கண்ட ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அனைவரும் முகமலர்ச்சியுடன் காணப்பட்டனர். இந்நிலையில் பந்தய தளத்தினை அகற்றும் பணியிலும் வெளிநாட்டவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கும் முன்னுரிமை அளித்து அவர்களை பந்தயத்தை காண அனுமதித்தது உண்மையில் பாராட்டத்தக்க செயலாகும்.

Related posts