கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி தற்போது நேற்று (ஜீலை.23) முதல் டோக்கியோவில் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.
இந்த ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான திரு. இம்மானுவேல் மெக்ரான் அவர்கள் டோக்கியோவிற்கு பயணம் சென்றுள்ளார்.
பயணத்துக்கு முன்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் நடைபெறக்கூடிய இந்த ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் சுமார் 40 பதக்கங்களை வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒலிம்பிக் போட்டிதை பொருத்தமட்டில் 17வது இடத்தில் இருக்கிறது பிரான்ஸ். வருகின்ற 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கவிருப்பதால் அந்த தருணத்தில் பிரான்ஸ் 5வது இடத்தை அடையும் அளவிற்கான வெற்றி காணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2024 ஒலிம்பிக்கிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடப்பதாகவும் அவர் கூறினார்.
நேற்று மாலை டோக்கியோ ஒலிம்பி நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்கியது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று துவக்க விழா, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை வண்ணமயமாக ஆரவாரத்துடன் நடைபெற்றது.