TamilSaaga

Cavenagh Road பகுதியில் தீயில் கருகிய கார்… சாலை விபத்தில் பரிதாபம் – 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூரில் நேற்று (ஜீலை.23) இரவு 9.20 மணியளவில் கெவனாக் சாலை வெளியேற்ற பகுதி அருகில் சாலை விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு SCDF (Singapore Civil Defense Force) வந்தபோது பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இந்த விபத்தில் இரண்டு கார், ஒரு லாரி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் இருந்தன.

SDFC அவசர மருத்துவ சேவை குழுவினர் (EMS) விபத்துக்குள்ளான 7 பேரின் காயங்களை மதிப்பீடு செய்தனர் மேலும் துடிப்பு இன்றி சுவாசிக்க இயலாமல் இருந்த ஒருவருக்கு கார்டியோ நுரையீரல் (CPR) சிகிச்சை வழங்கினர்.

தீயணைப்பு வீரர்கள் விபத்தால் ஏற்பட்ட தீயினை அணைத்தனர். ஒரு கார் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது.

மொத்தம் விபத்தில் பாதிக்கப்பட்ட 7 பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

Related posts