TamilSaaga

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு.. நேற்று (ஏப்ரல்.27) முதல் புதிய விதிமுறை.. சிங்கை அரசு முக்கிய அறிவிப்பு!

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு மக்களுக்கு அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

ஆம்! சிங்கப்பூர் அரசு இங்கு கொடி கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் துறையை கட்டுக்குள் கொண்டு வரவும், ரியல் எஸ்டேட் விலைகளை குறைக்கும் விதமாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் பெரு நகரங்களில் வீடு வாங்கும் வெளிநாட்டைச் சேர்ந்தோருக்கு முத்திரைக் கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.

இதன் காரணமாக சிங்கப்பூரில் வீடு வாங்க நினைக்கும் NRI-கள் இங்கு முத்திரை தாள் கட்டணத்தை இரண்டு மடங்கு அதிகமாக கொடுத்து வாங்க வேண்டும்.

சிங்கை அரசின் இந்த நடவடிக்கை மூலம், இங்கு ஒரு நிலையான ரியல் எஸ்டேட் சந்தையை உருவாக்க முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். அதேபோல், உள்ளூர் மக்கள் இதனால் அதிக பயன் அடைவார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த புதிய அறிவிப்பை, சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பின்னடைவாக பார்த்தாலும், உள்ளூர் மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எண்கள் ரீதியில் சொல்ல வேண்டுமெனில், சிங்கப்பூர் அரசு வெளிநாட்டினருக்கான முத்திரைத் தாள் கட்டணத்தை கிட்டத்தட்ட 60% உயர்த்தியுள்ளது. அதேசமயம், உள்ளூர் மக்கள் இரண்டாவது வீடு வாங்க வேண்டும் என்றால், அதற்கான முத்திரை தாள் கட்டணத்தை 17 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக அரசு உயர்த்தியுள்ளது. அதேபோல், உள்ளூர் மக்கள் மூன்றாவதாக ஒரு வீடு வாங்க வேண்டுமெனில், அதற்கான முத்திரை தாள் கட்டணத்தை 25 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக அரசு உயர்த்தியுள்ளது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான அறிவிப்பு என்னவெனில், சிங்கப்பூரில் உள்ளூர் மக்கள் தங்கள் முதல் வீட்டை வாங்கும் போது, அதற்கு முத்திரை தாள் வாங்க கட்டணமே செலுத்த தேவையில்லை என்பதுதான். அதேபோல், கணவன் அல்லது மனைவி என இருவரில் யாரேனும் ஒருவர் சிங்கப்பூர் சிட்டிசனாக இருக்கும் பட்சத்தில், முதல் வீடு வாங்கும் போது, முத்திரை தாள் கட்டணத்தை செலுத்திவிட்டு, பிறகு முறையான ஆவணங்கள் சமர்ப்பித்து Refund பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நேற்று ஏப்.27 முதல் அமலாகியுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts