சிங்கப்பூரில் லைசன்ஸ் எடுக்க நீங்கள் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டும். எனினும், இந்த தேர்வின் பயிற்சிக்காக நீங்கள் நேரடியாக எங்கும் செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல் ஒன்றே போதும், நீங்கள் தினமும் பயிற்சி எடுக்க.
தமிழ்நாடு போன்று லைசன்ஸ் எடுக்க வண்டி ஓட்டிக் காட்டுவது மட்டும் சிங்கப்பூரில் கிடையாது. இங்கு, வண்டியும் ஓட்டிக் காட்டணும், தேர்வும் எழுக வேண்டும். அதாவது, basic theory மற்றும் final theory எழுத வேண்டும். இதற்கு நீங்கள் வாகன பயிற்சி நிலையத்துக்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால், உங்களது வேலைப்பளு காரணமாகவோ, வேலை நேரம் காரணமாகவோ உங்களால் சரிவர பயிற்சி எடுக்க முடியாமல் போகலாம். சிங்கையை பொறுத்தவரை நீங்கள் இந்த இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை எனில், லைசன்ஸ் பெற முடியாது.
ஸோ, பயிற்சி இங்கு மிக மிக அவசியம். எனவே, நீங்கள் வேலைக்கு சென்று வந்து வீட்டிலேயே பயிற்சி எடுக்க TP Test ஆப் உதவுகிறது. ஆம்! இந்த ஆப்-ஐ நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன் லோடு செய்து கொள்ளலாம். அந்த ஆப் மூலம், டிரைவிங் லைசன்ஸ் தேர்வுக்கு நீங்கள் வீட்டிலோ அல்லது நீங்கள் தங்கியிருக்கும் அறையில் இருந்தபடியே பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.
‘இந்த ஆப் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது; எனக்கு ஒன்றும் புரியவில்லை’ என்று சொல்கிறீர்களா? கவலை வேண்டாம். அதற்கும் ஆப்ஷன் உள்ளது. TP TEST ஆப்-ல் நீங்கள் எழுத வேண்டிய தேர்வுக்கான பயிற்சி பக்கத்தினை ஓகே செய்த பிறகு, உங்களுக்கு கேள்விகள் வரத் துவங்கும். அப்போது அதிலேயே Translate ஆப்ஷன் இருக்கும். அதன் மூலம், நீங்கள் தமிழிலேயே பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இந்த தேர்வினை நீங்கள் சிங்கப்பூரில் தமிழிலும் எழுதலாம் என்பது கூடுதல் தகவல்.
சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, உங்களுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை இங்கே பார்க்கலாம்.
செல்லுபடியாகும் அடையாள ஆவணம் – உங்களின் NRIC (தேசிய பதிவு அடையாள அட்டை) அல்லது பாஸ்போர்ட் போன்றவை.
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் – இது plain அல்லது வெளிர் நிற பின்னணியில் கலர் ஃபோட்டோவாக எடுக்கப்பட வேண்டும்.
வசிப்பிடச் சான்று – இது utility bill-ஆக இருக்கலாம் அல்லது உங்கள் நிறுவனம் அளித்த கடிதமாக இருக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் – எந்தவொரு ஓட்டுநர் மையத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம் அல்லது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.
செல்லுபடியாகும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் (If applicabl) – நீங்கள் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமமாக மாற்ற விரும்பினால், செல்லுபடியாகும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் – சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம் S$50 ஆகும்.