பல சிங்கப்பூரர்கள் மட்டுமல்லாமல் இங்கும் வாழும் பலருக்கு, ஒரு காயா டோஸ்ட் மற்றும் teh-c kosong செட் உணவுடன் மிகவும் திருப்தி அடைந்து விடுவார்கள். ஒருவேளை இந்த எளிமையான மனம் தான் சிங்கப்பூரை ஆசியாவின் மகிழ்ச்சியான நாடு என்று பெயரிடப்பட்டதற்கு காரணமாக இருக்கிறது. மேலும் UNன் உலக மகிழ்ச்சி அறிக்கை 2023ல் உலகில் 25வது இடம் பிடித்து இருக்கிறது.
நிச்சயமாக, மகிழ்ச்சிக்கு காரணம் காயா தோசை என்று சொல்ல முடியாது. மகிழ்ச்சியை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய காரணிகள் வருமானம், ஆரோக்கியம், ஒரு சமூகத்தை நம்பியிருப்பது, முக்கிய வாழ்க்கை முடிவுகளை எடுப்பதற்கான சுதந்திர உணர்வு, தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாதது தான். இதுமட்டுமல்லாமல் பொது அரசியல், குறைந்த குற்ற விகிதங்கள் மற்றும் சிறந்த சுகாதாரம், கல்வி, வீடு, பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து விருப்பங்கள் ஆகியவற்றுடன் தான் சிங்கப்பூர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
தொடர்ந்து தைவான் 27வது இடத்தில் உள்ளது. மற்ற ஆசிய நாடுகளில் ஜப்பான் 47, மலேசியா 55, தாய்லாந்து 60, சீனா 64, வியட்நாம் 65, பிலிப்பைன்ஸ் 76, இந்தோனேசியா 84 மற்றும் இந்தியா 126. இந்த பட்டியலில் தொடர்ந்து ஆறாவது முறையாக பின்லாந்து மீண்டும் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, பின்னர் இஸ்ரேல் இடம்பெற்றுள்ளன.
150க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,000 முதல் 3,000 பேர் வரையிலான மாதிரி அளவு கொண்ட உலகளாவிய கணக்கெடுப்பைப் பயன்படுத்தி இந்த அறிக்கை மார்ச் 20 அன்று வெளியிடப்பட்டது. சராசரி வாழ்க்கை மதிப்பீடுகள் மூன்று வருட காலப்பகுதியில் உள்ளன. அதாவது இந்த அறிக்கையானது கோவிட்-19 தொற்றுநோய் முழுவதும் மகிழ்ச்சியின் அளவை திறம்பட மதிப்பிடுகிறது.
இறுதியில், மகிழ்ச்சி என்பது அகநிலை, அது வெறும் எண்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் என்றாலும் கூட, சிங்கப்பூர் முதலில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.