சிங்கப்பூர் வொர்க் பாஸ்களில் வேலைக்கு செல்ல இருக்கும் ஊழியர்களுக்கு கல்வி டாக்குமெண்ட்களை இல்லாமல் இருந்தால் என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்ள இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிங்கையில் வேலைக்கு செல்ல EPass, SPass அல்லது TEP வரும் ஊழியர்கள் கண்டிப்பாக டிகிரி படித்து இருக்க வேண்டும். ஆனால் சிலர் படித்து முடித்தவுடன் சிங்கை வேலைக்கு ட்ரை செய்வார்கள். அவர்களிடம் கல்வி மதிப்பெண் சான்றிதழ்கள் இல்லாமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் நீங்க செய்ய வேண்டியது தான் ரொம்ப முக்கியம்.
இதையும் படிங்க: SPassல் சிங்கப்பூர் வேலைக்கு போகணுமா? அப்போ Safety coordinator கோர்ஸ் படிங்க… சம்பளம் மட்டும் இத்தனை டாலரில் கிடைக்குமாம்
விண்ணப்பதாரர் டிகிரியை முடித்து விட்டார் என்பதை உறுதி செய்யும் பொருட்டு படித்த நிறுவனத்தில் இருந்து உறுதிப்படுத்தும் கடிதத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கடிதத்தில் பின்வருவன கட்டாயமாக இடம் பெற்று இருக்க வேண்டும்.
*கோர்ஸ் காலம்
*படிப்பின் பெயர்
*விண்ணப்பதாரர் சான்றிதழைப் பெறும் தற்காலிக தேதி
இதையும் படிங்க: Skill டெஸ்ட் அடிக்காமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா? இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கா? இத படிங்க செம Clarity கிடைக்கும்!
இவை அடங்கிய கடிதத்தினை மாற்றாக சமர்பிக்க முடியும் என்கிறது சிங்கை மனிதவளத்துறை. ஆனால் ப்ரஷர்கள் அப்ளே செய்யும் முன்னர் SATல் செக் செய்துவிட்டு அப்ளே செய்வதே சிறந்தது என்கிறார்கள்.