TamilSaaga

இந்த குற்றங்களுக்கு மரண தண்டனை தான்… பிடிவாதம் பிடிக்கும் சிங்கப்பூர்… மறுக்கும் உலக நாடுகள்… சிங்கை இதில் strictஆ இருப்பதற்கு காரணம் என்ன?

சிங்கப்பூரில் இருக்கும் மக்களும், இங்கு வேலைக்காக வந்தவர்களும் எப்போதுமே சில கட்டுப்பாடுகளை கடைபிடித்து தான் ஆக வேண்டும். அதை சரியாக செய்வதால் தான் இன்னமும் சிங்கப்பூர் பாதுகாப்பான நாடாக கருதப்படுகிறது.

வாழ்க்கை தரத்தில் ஆசிய கண்டத்திலேயே முதலிடம், உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடம், ஆசிய கண்டத்திலேயே வெளிநாட்டினர் வாழ சிறந்த நாட்டின் பட்டியலில் முதலிடம் என சிங்கப்பூர் எப்போதுமே டாப்பாக தான் இருந்து வருகிறது. ஆனால் உலகளவில் தற்போது 110 நாடுகள் மரண தண்டனைக்கு முற்றிலும் தடை வைத்து இருக்கிறது.

ஆனால் சிங்கப்பூர் உள்ளிட்ட நான்கு நாடுகள் மட்டும் இன்னமும் மரண தண்டனையை சில குற்றங்களுக்கு கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். முக்கியமாக சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் என்பது மிகப்பெரிய குற்றமாகும். இதில் சிக்கும் நபர்களுக்கு கண்டிப்பாக மரண தண்டனை தான். இந்த குற்றங்களுக்கு சட்டம் கடுமையாக்கப்பட்டால் தான் பெரிய மக்கள் கூட்டத்தினை காப்பாற்ற முடியும் என்கிறார் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம். மேலும் கடந்த வருடம் மட்டும் இந்த குற்றத்திற்காக மூன்று மலேசியர்களும், ஒரு சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவரும் தூக்கில் போடப்பட்டனர்.

இதையும் படிங்க: ஏர்போர்ட்டில் 18 வருடமாக வாழ்ந்த மனிதர்… திடீரென வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி… என்ன நடந்தது திகில் ரிப்போர்ட்?

குறிப்பிட்ட குற்றங்களுக்கு சிங்கப்பூர் தரும் கடுமையான தண்டனைக்கு அந்நாட்டு மக்களும் ஆதரவாக இருக்கின்றனர். 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சிங்கப்பூர் சட்டங்கள் அப்படியே தொடர 98 சதவீத பேர் ஆதரவாக இருந்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்துவதற்கு கட்டாய தூக்கு தண்டனைக்கு ஆதரவாக 70 சதவீத பேர் இருக்கின்றனர்.

போதைப்பொருளுக்கு மட்டும் ஏன் இத்தனை பெரிய கட்டுப்பாடு எனக் கேட்கும்போது இதை பயன்படுத்துபவர்கள் எளிதாக மற்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு விடுவார்கள். இதனால் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கே கடுமையான தண்டனை இருந்தால் அதை உபயோகப்படுத்தும் போது அச்சம் இருக்கும் என்கிறது சிங்கப்பூர் அரசு.

போதைப்பொருள் பயன்பாட்டு மிகப்பெரிய எதிரியாக இருக்கும் அரசு, அதனை தடுக்க பல வழிகளில் முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் தூக்கு தண்டனையும் இருக்கிறது. போதைப்பொருள் மட்டுமல்லாமல் இன்னும் சில குற்றங்களுக்கும் சிங்கப்பூர் தூக்கு தண்டனை கொடுத்து வந்தது.

கொலை, தீவிரவாத செயலில் ஈடுபடுவது, போதை பொருள் கடத்தல் ஆகிய 33 குற்றங்களுக்கு செய்தாலே தூக்கு என்ற நிலை தான் சிங்கப்பூரில் இருந்து வந்தது. 2012ம் ஆண்டு கட்டாய மரண தண்டனையில் இருந்து சில நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

1970க்கு பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் சிங்கப்பூரில் இருக்கும் மரண தண்டனை வழக்குகளை விசாரித்து வருகிறது. சிங்கப்பூரில் பெரிய அளவில் வெளிநாட்டினர் இருப்பதால் போதை பொருள் புழக்கம் அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரமே அடி வாங்கும் நிலை உருவாகும். அதுமட்டுமல்லாமல் மலேசியாவில் இந்த பழக்கம் அதிகரித்துள்ளதால் சிங்கப்பூர் தனது எல்லைகளை எப்போதுமே கடுமையாக கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல அக்டோபர் மாதம் Skilled டெஸ்ட் அடிச்சீங்களா? அப்பாடா! ஒரு வழியா ரிசல்ட் வந்தாச்சு… இன்னொரு இனிப்பான செய்தியுடன்!

மேலும், சிங்கப்பூரில் மரண தண்டணை நிறைவேற்றப்பட இருக்கும் கைதிக்கு கடைசியாக குடும்பத்தினர் பிடித்த உடை என அனைத்தையும் வாங்கி கொடுக்கலாம். அதை அவர்கள் அணிந்து கொண்டு சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்து கொள்வர். இது ஒரு கொடிய நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த நடைமுறை எதற்கு என்று சிங்கப்பூர் சிறை நிர்வாகம் இதுவரை கூறியதே இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

சிங்கப்பூரில் தற்போது 60 பேர் வரை தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கின்றனர். அதில் பலரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தான் அதிகம் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts