TamilSaaga

சிங்கப்பூரில் PCMல் வேலைக்கு சென்று Skilled டெஸ்ட் அடிக்கலாமா? குழப்பமா இருந்தா சட்டுனு பதில் கிடைக்க இத படிங்க… லைஃப்ல change இருக்கும்!

சிங்கப்பூரில் pcm permitல் வேலைக்கு செல்லலாமா? இல்ல skill அடிக்கலாமா? என்ற குழப்பத்தில் இருக்கீங்களா. இன்னும் சிலருக்கு pcmல் சிங்கப்பூர் வந்துவிட்டு இங்கையே டெஸ்ட் அடித்து விடலாம் என்ற எண்ணம் கூட இருக்கும். இப்படி நிறைய குழப்பங்களுக்கான விடையாக தான் இந்த பதிவு இருக்கும். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் சிங்கப்பூரில் வேலைக்கு வர PCM மற்றும் shipyard பெர்மிட் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இது கப்பல் கட்டும் இடத்திலும், தொழிற்சாலைகளிலும் வேலை இருக்கும். மேலும் சம்பளம் ஒரு நாளைக்கு $18 சிங்கப்பூர் டாலருக்குள் தான் இருக்கும். மேலும், உங்களுக்கு தங்குமிடம் கம்பெனி தராது. அவர்கள் தந்தாலும் அதற்கு உங்களது சம்பளத்தில் பிடித்தம் இருக்கும். இதுவும் சில கம்பெனிகளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் இந்திய ஊழியர்களுக்கு வேலை நேரம் எப்படி இருக்க வேண்டும்? இதற்கு சம்பளம் எப்படி கொடுப்பார்கள்? வாழ்க்கை ஒன்னும் அவ்வளவு ஈசி இல்ல பாஸ்!

ஒரு ஏஜெண்ட்டை பிடித்து ஏறக்குறைய 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை இதற்கு கட்டணமாக கொடுத்து தான் உங்களால் சிங்கப்பூரில் வேலையை பெற முடியும். தொடர்ச்சியாக பெரிய அளவில் சம்பள உயர்வு இருக்காது. ஒவ்வொரு முறை இந்த பாஸில் சிங்கப்பூரில் வந்தாலும் இதே அளவில் தான் கட்டணமும் இருக்கும்.

இதுவே skilled டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வருவதற்கு 4 முதல் 4.5 லட்சம் வரை செலவுகள் இருக்கும். உங்களுக்கு பொருளாதார பிரச்னையாக இருந்தால் PCM பெர்மிட்டிலே வரலாம். ஏனெனில், Skilled டெஸ்ட் முடித்து சிங்கப்பூர் வந்தால் கூட உங்களுக்கு ஏறக்குறைய இதே மாதிரி தான் சம்பளம் ஒருநாளுக்கு $18 சிங்கப்பூர் டாலர் தான் இருக்கும். இருந்தும், skilled முடித்து வந்தவர்களுக்கு கம்பெனியே தங்குமிடத்தினை வழங்கி விடும். அதில் பிடித்தம் கூட இருக்காது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்காக வந்திருக்கும் ஊழியரா நீங்க… குடும்பத்துடன் தங்க ஆசையா? Dependent விசா எடுக்கலாம்… மிஸ்ஸாகும் பட்சத்தில் இதை கூட Follow பண்ணுங்க

சரி, PCMல் வந்துவிட்டு சிங்கப்பூரில் skilled டெஸ்ட் அடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தால் அதிலும் ஒரு விஷயம் இருக்கிறது. சிங்கப்பூரில் 3 அல்லது 4 நாட்களில் டெஸ்ட் அடித்து விடலாம். ஆனால் அது கம்பெனி ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒப்புக்கொள்ள முடியாத பட்சத்தில் உங்களால் சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க முடியாது.

pcmல் வரும்போதே டெஸ்ட் அடித்து இந்த கம்பெனியிலேயே வொர்க் பெர்மிட்டில் மாற முடியுமா என்பதை கேட்டு தெரிந்து கொண்டு வாருங்கள். இல்லையென்றால் முதல் வருடமோ அல்லது உங்களது பாஸின் வாலிடிட்டி வரை அமைதியாக இருப்பது தான் நல்லது. கம்பெனிக்கு தெரியாமல் டெஸ்ட் அடிக்க சென்றால் மீண்டும் இந்தியாவிற்கு கூட திருப்பி அனுப்பப்பட்டு விடலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts