சிங்கப்பூர் TOTO லாட்டரியின் இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கல் கடந்த நவ.24ம் தேதி நடைபெற்றது. இதில் Group 1 எனப்படும் முதல் பரிசை வென்றவருக்கு $2,708,396 சிங்கப்பூர் டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.
சிங்கப்பூரின் பிரபலமான TOTO லாட்டரியின் குலுக்கல் வாரம் இருமுறை நடைபெற்று வருகிறது. அதில் இந்த வாரத்திற்கான முதல் குலுக்கலில் முதல் பரிசான Group 1 ஜாக்பாட் யாருக்கும் கிடைக்காத நிலையில், கடந்த 24ம் தேதி இரண்டாவது குலுக்கலில் ஒருவருக்கு $2,708,396 சிங்கப்பூர் டாலர்கள் பரிசு கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாயாகும்.
அதே போல், Group 2 எனப்படும் இரண்டாவது பரிசுத்தொகையாக $53,969 என அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 32 லட்சமாகும். இந்த பரிசை 6 நபர்கள் வென்றுள்ளனர்.
மேலும், Group 3 பிரிவில் பரிசுத்தொகை $709 சிங்கப்பூர் டாலர். இது இந்திய மதிப்பில் 42,000 ரூபாயாகும். இது 314 பேருக்கு கிடைத்துள்ளது. அடுத்து, Group 4வது பிரிவில் $200 சிங்கப்பூர் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளனர். இது, 608 பேருக்கு கிடைத்துள்ளது. Group 5ல் $50 சிங்கப்பூர் டாலரை 12,441 பேர் பெற்றுள்ளனர். Group 6வது பிரிவில் $25 சிங்கப்பூர் டாலரை 12,697 பேர் பெற்றுள்ளனர். கடைசியாக Group 7ல் பரிசுத்தொகை $10 சிங்கப்பூர் டாலர். அது 180,443 பேருக்கு கிடைத்துள்ளது.
இதில் முதல் பரிசை வென்ற நபர் சுமார் 16 கோடி தொகையை வென்றிருக்கும் நிலையில், அவரது வறுமை வாழ்க்கை ஒரே நாளில் மாறியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் எனக்கு போராட்டம் தான். மாதம் வெறும் 500 டாலர் உழைக்க நாயைப் போல உழைத்திருக்கிறேன். எல்லோரும் நினைப்பது போல், சிங்கப்பூர் வாழ்க்கை என்பது அவ்வளவு மகிழ்ச்சியான ஒன்று கிடையாது. யார் நம்மை மிதித்து மேலே ஏறுவார்கள் என்றே தெரியாது. கூட பழகுபவர்கள் கூட முதுகில் எப்போது குத்துவார்கள் என்று தெரியாது. இப்போது கூட, 1000 டாலர் சம்பாதிப்பதற்குள் அவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது. எனக்கு 16 கோடி கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. குருட்டு நம்பிக்கையில் தான் ஒவ்வொரு முறையும் லாட்டரி வாங்குவேன். அது இம்முறை எனக்கு கைக்கொடுக்கும் என்று நினைக்கவில்லை. இந்த பணத்தை கொண்டு, என்னை போன்று கஷ்டப்படும் நபர்களுக்கு உதவ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.