TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் டெல்டா மக்களே.. உங்கள் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் Exclusive Update.. சோழ தலைநகரில் பிரம்மாண்டமாக உருவெடுக்கும் ஏர்போர்ட்!

தமிழகத்தை சேர்ந்த சென்னை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் விமான நிலையம் அமைந்து இருக்கிறது. இதில் டெல்டா மக்கள் பலரும் பயன்படுத்துவது என்னவோ திருச்சி விமான நிலையத்தினை தான். இதற்காக 100க்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் செய்யும் நிலை தான் இருந்து வருகிறது.

டெல்டாவில் இருக்கும் மக்கள் பலரும் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகின்றனர். இன்னும் பலர் இங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் போது திருச்சியில் இறங்கி அங்கிருந்து சில மணிநேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்க இருப்பதாக தமிழக எம்.பி பழனிமாணிக்கம் தெரிவித்து இருக்கிறார். தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் நிலப்பரிவர்த்தனை தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் கூறுகையில், டெல்டா மாவட்டங்களுக்கு மையமாக இருக்கும் தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க பேச்சுவார்த்தைகள் துவங்கி இருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் விமான போக்குவரத்து தஞ்சாவூரில் துவங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் தஞ்சாவூர் விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைய துவங்கியது. அதனால் அங்கு பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தஞ்சாவூரில் விமானப்படை உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளிநாடுகளுக்கு வேலை சம்மந்தமாக தொடர்ச்சியாக பயணம் செய்கிறார்கள் என்றார்.

மேலும், தஞ்சாவூரினை சுற்றி இருக்கும் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளும் வருவது அதிகரித்து விட்டது. இதனால் இங்கு பயணிகள் விமான சேவையை விரைவில் துவங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தஞ்சை எம்.பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்து இருக்கிறார். விமான படையிடம் இருக்கும் 38 ஏக்கர் நிலத்திற்கு பதில் புதுக்கோட்டை சாலையோரம் உள்ள இடத்தை விமானப் போக்குவரத்து துறைக்கு வழங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்து இருக்கிறார். இதனால் வெளிநாடு ஊழியர்கள் இனி சில மணிநேரங்களில் தங்கள் வீட்டிற்கு சென்று விடலாம். தற்போது இந்த செய்தி வெளிநாட்டில் வேலை செய்யும் டெல்டா ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வர எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts